கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 44 : திருக்குறள் கற்றுத் தெளிந்த காதை
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 43 : பூங்கொடி தெளிதல்) பூங்கொடி நாவலர் வருகை அந்நகர் மக்கள் அறியா மையிருள்வெந்நிட அறிவொளி விரித்தெழு செஞ்சுடர்ப்பரிதி என்னப் பாவை விளங்க,உரிமை வேட்கையும், உன்னும் பண்பும்,உன்னிய தஞ்சா துரைக்கும் உரனும், 5முன்னூ லாகிய முத்தமிழ் வகைக்கும்விரித்துறை திறனும், வியனுறு குறள்நூல்உலகெலாம் பரவ உழைக்கும் செயலும்,உடையார் அறிவுப் படையார் ஒருவர்நடையால் உயர்ந்த நாவலர் அந்நகர் 10வருமவர் பூங்கொடி வந்துள தறிந்துபெரும்பே ராசான் அருங்குண அறிஞர்திருமா மகளைத் தேடி வந்தனர்; பூங்கொடி நிகழ்ந்தன கூறல் மன்னிய குறள்நூல் மாசறத் தெறிந்தேன்;குறளகம்…