ஆரிய எதிர்ப்பே திருவள்ளுவரின் கடவுள் வாழ்த்து – இலக்குவனார் திருவள்ளுவன்
ஆசியவியல் நிறுவனம் திருக்குறள் பன்னாட்டுக் கருத்தரங்கம் இலிவர்பூல், இங்கிலாந்து ஆனி 13-15, 2049 சூன் 27 – 29, 2018 ஆரிய எதிர்ப்பே திருவள்ளுவரின் கடவுள் வாழ்த்து மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே! கட்டுரையாளர்களே! பேராயர் எசுரா சற்குணம், அமுதன் அடிகள், இலிவர்பூல் தமிழன்பர்கள், இலண்டன் தமிழன்பர்கள் முதலான அவையோரே! அனைவருக்கும் வணக்கம். வாழ்வியல் அறநூலாகிய திருக்குறள் அனைவருக்கும் பொதுவான உலக நூலாகத் திகழ்கிறது. எனவே, உலக மக்களைப் பிளவுபடுத்தும் கருத்துகளுக்கு எதிரான அறஉணர்வையும் விதைக்கிறது. “திருவள்ளுவர் உலகின் முதல் புரட்சியாளர்” எனப்…