திருக்குறள் விக்கி – குறள் நிகழ்வு ஒருங்கிணைப்புத் தளம்
உலகெங்கும் இயங்கும் திருக்குறள் அமைப்புகளுக்கு ஒரு வேண்டுகோள்” குறள் பரப்பும் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைக்கும் நோக்குடனே திருக்குறள் விக்கி தொடங்கப்பட்டுள்ளது. நீங்கள் நடத்தும் கூட்ட நிகழ்ச்சிகளை எம்பி4 வடிவத்தில் அனுப்புங்கள். காணொளி நறுக்குகளாகப் பதிவேற்றம் செய்யலாம். பத்துப் பத்து மணித்துளிகள் கொண்ட பதிவுகளாக அமைக்கவேண்டும். அப்போதுதான் அலுப்பு தட்டாமல் கேட்கலாம். உங்கள் ஊரில் இருபதுபேர் கூடிய கூட்டமாக இருப்பினும் வலைத்தளம் மூலம் ஆறு கோடித் தமிழரும் கேட்கும்படிச் செய்யலாம் அல்லவா? வான்புகழ் வள்ளுவம் மானிடம் தழைக்க வாய்த்த மாமருந்து.இன்றைய சூழலில் உலகம் முழுமையும் அமைதி நிலைத்திட அல்லல் தொலைந்திட…