திருவள்ளுவரின் அறிவியல் சிந்தனை – களப்பால் குமரன்

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு – 355 காதல் சிறப்புரைத்தல் அதிகாரத்தின் (113) முதல் குறட்பா,  அறிவியல் ஆய்வாளர்களின் ஆய்வு முடிவை ஒத்துள்ளது என்பது வியப்புக்குரிய அறிவியல் உண்மையாகும். 1.   பாலொடு தேன்கலந்து அற்றே பணிமொழி வால்எயிறு ஊறிய நீர்.   இம்மென் மொழியாளின் வெண்பல்லில் ஊறிய நீர் ; பாலுந் தேனுங்கலந்த கலவை போலும் . – பாவாணர் The dew on her white teeth, whose voice is soft and low, Is as…

திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்கவலியுறுத்துவேன் – வாசன்

திருவள்ளுவர்  நாளை முன்னிட்டு, சென்னை மயிலாப்பூரில் திருவள்ளுவர் புகழ்பாடும் தமிழ் இசை நிகழ்ச்சி புதன்கிழமை (தை 2, 2045/ சனவரி 15.2014) நடந்தது. இதில் 133 தமிழ் இசைவாணர்க்ள பங்கேற்று, இசை நிகழ்ச்சி நடத்தினர். நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் வாசன் பேசியதாவது: “உலகப் பொதுமறையான திருக்குறள், உலகின் புனித நூல்களான குர் ஆன் மற்றும் பைபிளுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் மொழி பெயர்க்கப்பட்ட நூலாகும். அதனால்தான் இனம்,  மொழிகளைத் தாண்டி உலகப் பொதுமறையாகத் திருக்குறள் விளங்குகிறது. அனைத்து நாட்டு…

வள்ளுவர் வகுத்த அரசியல் 2. நல் அரசு இயல்

   – –குறள்நெறிக் காவலர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (29 திசம்பர் 2013   இதழ்த் தொடர்ச்சி)  அ. செங்கோன்மை  நாடு, அதைக் காப்பதற்குரிய அரண், படை, பொருள் ஆயவைபற்றி அறிந்தோம். இனி நாட்டில் ஆட்சிமுறை எவ்வாறு  இருத்தல் வேண்டும் என்று ஆராய்வோம். மக்களுக்கு நன்மை பயக்கும் நல்ஆட்சி எப்படியிருக்கும், தீமை பயக்கும் ஆட்சி எது, ஆட்சி புரிவோர் எவ்வாறு இருத்தல் வேண்டும் என்று தெரிதல் வேண்டும். நன்மை பயக்கும் ஆட்சியைச் செங்கோன்மை என்பர். செங்கோல் என்பது வளைவில்லாத கோல். வளைவு இல்லாத கோல்போல் ஆட்சியும்…

வள்ளுவர் வகுத்த அரசியல் – – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

(முந்தைய இதழ்த் தொடர்ச்சி)   உ. பொருள் செயல்வகை  நாட்டுக்கு அரணும் படையும் இன்றியமையாதன. அவற்றை ஆக்கவும் காக்கவும் பொருள் மிகமிக இன்றியமையாதது. ஆதலின், பொருளைச் செய்தலின் திறம் இங்குக் கூறப்படுகின்றது. பொருள் நாட்டையாள்வோருக்கு மட்டுமன்றி ஆளப்படுவோர்க்கும் இன்றியமையாதது.   1. பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள்.  (குறள் 751)      [பொருள்அல் லவரைப் பொருளாகச் செய்யும்     பொருள்அல்லது இல்லை பொருள்.] பொருள் அல்லவரை – ஒரு பொருளாக மதிக்கப்படும் தகுதி இல்லாதாரை(யும்), பொருளாகச் செய்யும்-ஒரு பொருளாக மதிக்கச்…

வள்ளுவர் வகுத்த அரசியல் – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

(முந்தைய இதழ்த் தொடர்ச்சி)   ஈ. படைச்செருக்கு   படைச்  செருக்கு = படையது மறமிகுதி. படை வீரர்களின் வீரச் சிறப்பு. மறம் (வீரம்) மிக்க வீரர்களாலேயே வெற்றி கிட்டும். மறம் மிக்க வீரர்களின் இயல்பை விளக்குகின்றது இப் பகுதி.   1. என்னைமுன் னில்லன்மின் றெவ்விர் பலரென்னை முன்னின்று கன்னின் றவர் (குறள் 771) [என்ஐமுன் நில்லன்மின் தெவ்விர், பலர்என்ஐ முன்நின்று கல்நின் றவர்.]   தெவ்விர் – பகைவர்களே, என்ஐமுன்-என் தலைவன் எதிர், நின்று-போர் ஏற்று நின்று, கல்நின்றவர் – இறந்து,…

திருக்குறள் திலீபனின் நூறாவது கவனகக் கலை நிகழ்வு

  கவனகக் கலையைத் தானும் கற்றுப் பிறருக்கும்  கற்பித்து வரும் தமிழ்ஆர்வ இளைஞர் திருக்குறள் திலீபன்.  இவரது நூறாவது நிகழ்வு காரைக்குடியில் 08.12.13 ஞாயிறு காலை நடத்தப் பெற்றது.   தமிழக மக்களின் பழங்கலைகளில்,  கவனகக் கலை நுண்ணாற்றலை வெளிப்படுத்தும் சிறந்த கலையாகும். ஒரே நேரத்தில் தன்னைச் சுற்றி நடக்கக் கூடிய பல்வேறு நிகழ்வுகளை, நினைவில் நிறுத்தித் தொகுத்து வழங்கல் நினைவாற்றலின் உயர்ந்த நிலையாகும். நினைவாற்றலுடன் படைப்பாற்றலும் இணைந்ததே கவனகக்கலை.   திலீபன் காரைக்குடியைச் சேர்ந்த, தங்கசாமி – சுமதி  இணையரின் மகனாவார்; சென்னை…

வள்ளுவர் வகுத்த அரசியல்

 – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (முந்தைய இதழ்த் தொடர்ச்சி) 3..        பெரும்பொருளால் பெட்டக்கது ஆகி  அருங்கேட்டால்  ஆற்ற விளைவது நாடு. (குறள் 732)  பெரும் பொருளால் – மிகுந்த பொருள்களால்; பெட்டக்கது ஆகி – யாவராலும் விரும்பத்தக்கது ஆகி; அருங்கேட்டால் – கேடுகளின்மையால்; ஆற்றவிளைவதே – மிகுதியாக விளைவதே; நாடு-நாடு ஆகும்.  நாட்டில் மிகுந்த பொருள்கள் இருந்தால்தான் குறைவற்ற வாழ்க்கை நடத்த முடியும். இல்லையேல் முட்டுப்பட்ட வாழ்க்கை நடத்துவதனால் துன்புற்றுப் பொருள் நிறைந்துள்ள வெளிநாடுகட்குச் செல்லத் தலைப்படுவர். நமது நாடு மிகுந்த பொருள்கள்…