”ஆட்சிக்கு, கொள்கைகளுக்கு, வஞ்சனைகளுக்கு, சூழ்ச்சிக்கு, சொத்துக்குவிப்புக்கு எதிராக மாபெரும் புரட்சியை நடத்த வேண்டிய கட்டாயம் வந்துள்ளது,” என, திருச்சியில் நடந்த தேர்தல் கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.  தி.மு.க., வேட்பாளர்கள் அன்பழகன் (திருச்சி), சின்னசாமி (கரூர்), சீமானூர் பிரபு (பெரம்பலூர்) ஆகியோரை ஆதரித்து, அவர் பேசியதாவது: “அ.தி.மு.க., ஆட்சியில், மக்கள் பல கொடுமைகளுக்கு ஆளாகி உள்ளனர். நீங்கள் கனவு கண்ட ஆட்சி வந்தது. அந்த ஆட்சி, சாதாரண மக்கள் வாங்கிப் புசிக்கின்ற விலைவாசியில் தான் கை வைத்தது. எது உயர்ந்தாலும், உயராவிட்டாலும் விலைவாசி…