தமிழகத்தின் தலைநகராகத் திருச்சிராப்பள்ளி ! தமிழே கல்வி மொழி!: தங்கர்பச்சன்

திருச்சிராப்பள்ளியில் நடக்கும் புத்தகக் கண்காட்சிக்கு திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சன் 15.02.14 அன்று வந்தார்.  அப்பொழுது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது– இந்தியாவின் வடக்கு எல்லையில் உள்ள சென்னை தமிழகத்தின் தலைநகரமாக இருப்பதால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்குச் செல்லும் அனைவரும் 10 மணி நேரத்திற்கும் அதிகமான நேரம் பயணம் செய்து மிக  அல்லல்பட்டுச் சென்னை செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பணச்செலவு, கால  இழப்பு, ஊர்திப் புகையினால் மாசு எனப் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. சென்னை போன்ற பெருநகரங்கள் மேலும் விரிவடைவதால் வேளாண் நிலங்கள்…

பன்னாட்டுக் கருத்தரங்கம்-தமிழ்க் கணினி இணையப்பயன்பாடுகள்

  அன்பு வலைப்பதிவு நன்பர்களுக்கு வணக்கம்.   தமிழ்க்கணினி இணையப்பயன்பாடுகள் என்ற தலைப்பில் பன்னாட்டுக்கருத்தரங்கம் மார்ச்சு 27,28 – 2014 அன்று திருச்சிராப்பள்ளியில் எமது கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. இக்கருத்தரங்கிற்குப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் கணினி தொழில்நுட்ப அறிஞர்களிடமிருந்து கட்டுரைகள் வரவேற்க்கப்படுகின்றன. இத்துடன் அழைப்பிதழை இணைத்துள்ளேன். தொடர்பிற்கு முனைவர் துரை.மணிகண்டன் அலைபேசி எண்: 9486265886 http://www.manikandanvanathi.blogspot.in/2014/01/blog-post.html