திருமணம் குறித்துத் தந்தை பெரியார் சிந்தனைகள் தொடர்ச்சி : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)
(தந்தை பெரியார் சிந்தனைகள் 19 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 20 2 . திருமணம் தொடர்ச்சி (3) சாரதா சட்டத்தை மீறுவதான முறையில் மணம் நடைபெறப் போவதாகத் தெரிந்தால் அதைத் தடுக்கும் அதிகாரமும் அவ்வழக்கை விசாரிக்கும் அதிகாரமும் நீதிமன்றத்துக்கு இருக்கவேண்டும். (4) பெண்களுக்கும் ஆண்களுக்கும் திருமணம் செய்து வைத்து விடுவதால் சிறுவயதிலேயே அவர்கள் தலைமீது குடும்பப் பொறுப்பு விழுந்து விடுகின்ற காரணத்தால் சுதந்திரம் அற்றுக் கவலை, தொல்லை இவற்றிற்கு ஆளாகிப் போதிய வளர்ச்சியற்றவர்களாக ஆகிவிடுகிறார்கள். திருமண அடையாளம்: திருமணத்தில் தாலிகட்டப் பெறுகின்றது. இதுபற்றிப் பெரியார் சிந்தனைகள்: (அ) தாலிகட்டுவது என்பது பெண்களுக்குமட்டும் ஆண்கள் தாலிகட்டுவதால் அதில் ஏதோ…
திருமணம் குறித்துத் தந்தை பெரியார் சிந்தனைகள் தொடர்ச்சி : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)
(தந்தை பெரியார் சிந்தனைகள் 18 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 19 2 . திருமணம் தொடர்ச்சி (9) அறிவோடு சிக்கனமாக வாழவேண்டும். வரவிற்குமேல் செலவிட்டும் பிறர் கையை எதிர்ப்பார்ப்பதும், ஒழுக்கக்கேடான காரியங்களுக்கு இடங்கொடுப்பதுமான காரியங்கள் இன்றி வரவிற்குள் செலவிட்டுக் கவலையற்ற வாழ்வு வாழ வேண்டும். (10) மணமக்கள் இருவரும் நண்பர்களாக நடந்து கொள்ள வேண்டும். வாழ்க்கை அன்புருவாக இருக்க வேண்டும். மணமக்கள் தங்களுக்காகவே என்று இராமல் மற்றவர்க்காகவே வாழ்கின்றோம் என்று எண்ணவேண்டும். (இ) சீர்த்திருத்தத் திருமணம்: இதுபற்றியும் ஐயாவின் சிந்தனைகளை உங்கள் முன்வைக்கிறேன்: (1) கல்யாணம் என்றால் சுதந்திர வாழ்க்கை, சமத்துவ வாழ்க்கை என்று இருக்க வேண்டுமேயொழிய அடிமை…
திருமணம் குறித்துத் தந்தை பெரியார் சிந்தனைகள் : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)
(தந்தை பெரியார் சிந்தனைகள் 17 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 18 2 . திருமணம் வழக்கமாக நடைபெறுவது: (1) திருமணம் என்பது-வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் என்றால் ஒரு பெண்ணும் ஓர் ஆணும் சேர்ந்து உலக வாழ்வு வாழ்வதற்காக ஏற்படுத்திக் கொள்ளுகிற ஒப்பந்தம் (contract) என்பதாக இருக்க வேண்டுமே தவிரத் திருமணம் என்றால் ஆண் வீட்டாருக்குச் சம்பளம் இல்லாமல் வெறும் சோற்றுச் செலவோடு மட்டுமே ஒரு வேலைக்கு ஆள் (பெண்) சம்பாதிப்பதாக இருக்கக்கூடாது. (2) ஆணும் பெண்ணும் கூடி வாழ்வதுதான் வாழ்க்கை. வாழ்க்கை நடத்த ஆணும் பெண்ணும் –…
தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 9/17
(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 8/17 தொடர்ச்சி) தனித்தமிழ்க் கிளர்ச்சி : 9/17 திருமணம் காதலனும் காதலியும் கருத்தொன்றிக் கலந்ததமிழ்க்காதல் மணமேயக் காலத்தில் அம்மானைகாதல் மணமேயக் காலத்தி லாமாயின்ஈதல் கிழவனுக்கின் றேற்றதோ அம்மானைசாதல் கிழமணத்தின் சாலவுநன் றம்மானை (41) நந்தமிழ் மக்கள்செய் நல்லதொரு திருமணத்தில்செந்தமிழினால் நிகழ்ச்சி செய்யவேண்டும் அம்மானைசெந்தமிழி னால்நிகழ்ச்சி செய்யவேண்டு மாமாயின்வந்தவட மொழிபோகும் வழியென்ன அம்மானைவந்தவழி யேபோகும் வடமொழிதான் அம்மானை (42) தமிழர்தம் திருமணத்தில் தக்கமண நிகழ்ச்சிகளைத்தமிழ்ப்பெரியார் நிகழ்த்துதலே…
தொல்காப்பியர் மன்றத்தின் திங்கள் கருத்தரங்கம், கனடா
மாசி 27, 2048 / மார்ச்சு 11, 2017 முற்பகல் 9.30 தொல்காப்பியர் மன்றம், கனடா
தமிழர் திருமண முறை – கே.கே.பிள்ளை
தமிழர் திருமண முறை அகத்திணையுள் திருமண வாழ்க்கை ‘கற்பு’ என அழைக்கப்படுகின்றது. தலைவன் தலைவி இருவரின் பெற்றோரும் அவர்களுடைய திருமணத்துக்கு உடன்படுவர்.1 திருமணம் ஒரு நல்ல நாளில் நடைபெறும்.2 தீய கோள்கள் இடம் விட்டு விலகவும், நிலா உரோகிணியுடன் கூடவும் வேண்டும். விடியற்காலையிற்றான் திருமணம் நடைபெறும். திருமணப் பந்தலில் புதுமணல் பரப்பப்படும்; மாலைகள் தொங்கவிடப்படும்; அழகிய விளக்குகளை ஏற்றி வைப்பார்கள். வயது முதிர்ந்த மங்கல மகளிர் தண்ணீரைக் குடங்களில் முகந்து தம் தலையின் மேல் தூக்கிக் கொண்டு வந்து ‘சிறு மண்டை’ என்னும்…