தூததும் நினைவே அன்றோ ! – திருமதி சிமோன்
தூததும் நினைவே அன்றோ ! – திருமதி சிமோன் காலமோ மாறி ஓடும் கற்பனை, சுவையும் மாறும் ! ஞாலமோ சுமையை வாழ்வில் நாளுமே ஏற்றி வைக்கும் ! பாலமாய் நின்று தாங்கும் பாசமும் மறைந்து போகும் ! தூலகம் (விடம்) நிறைந்த போதில் தூததும் நினைவே அன்றோ ! எண்ணும் பொழுதில் விளையாடும் இளையோர் நினைவும் அதிலன்றோ ! வண்ணம் மின்னும் காதலதும் வாழ்வில் மாந்தர் நினைவன்றோ ! திண்ணம் முதியோா் கனவெல்லாம் தேடும் வம்ச வளமன்றோ ! சுண்ணம் (தூசு) போன்று மறைந்தேகி தொடரும் கடிதோர்…