அரசியல் அதிர்வலை ஏற்படுத்திய மக்கள்நலக்கூட்டணி மாநாடு!
[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] அரசியல் அதிர்வலை ஏற்படுத்திய மக்கள்நலக்கூட்டணி மாநாடு! மதுரை மக்களுக்கு அங்கே ஓர் அரசியல் மாநாடு நடைபெறும் என்ற அறிகுறியே காணப்படவில்லை. மதுரைத் தெருக்களை அணிசெய்தவை திருமலை நாயக்கர் விழா, தொடர்பான அம்மாவிற்கு நன்றி அறிவிப்பு. அழகிரியின் பிறந்தநாள், தாலின் வருகை முதலான சுவரொட்டிகளே! இருநாள் முன்னர் நடைபெற்ற தமிழ்த்தேசியப்பேரியக்கத்தின் மொழிப்போர் 50 மாநாடு பற்றிய 1000 சுவரொட்டிகள் இருந்த இடம் தெரியா அளவிற்கு மேற்குறித்த சுவரொட்டிகள்தாம் இருந்தன. அதுபோல், மதுரையில் மக்கள் நலக்கூட்டணி மாநாடு 26 /…
கருணாநிதி இடஒதுக்கீட்டின் பாதுகாவலராக விளங்குகிறார்: திருமாவளவன்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சனநாயக முற்போக்குக் கூட்டணியின் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளருமான திருமாவளவன் செயங்கொண்டம், தா.பழூர் ஒன்றியத்தில் மோதிரம் சின்னத்திற்கு வாக்கு திரட்டினார். “தா.பழூர் ஒன்றியத்தில் சிலால், கோடங்குடி, பொற்பதிந்த நல்லூர், நாயகனைப்பிரியாள், சிங்கராயபுரம், பாண்டி அங்காடி, அழிசுக்குடி, சுத்தமல்லி, நாச்சியார்பேட்டை, ஆதிச்சனூர், நத்தவெளி, விக்கிரமங்கலம், முட்டுவாஞ்சேரி, அருள்மொழி, தா.பழூர் முதலான ஐம்பதுக்கும் மேற்பட்ட ஊர்களிலும் வாக்கு கேட்டார். சிலால் என்னுமிடத்தில் பரப்புரையைத் தொடங்கி வைத்து திருமாவளவன் பேசியதாவது:– இந்தத் தேர்தல் சமயவாதத்திற்கும், மக்கள்நாயகத்திற்கும் இடையே நடக்கின்ற போர் தலைவர் கலைஞர்…