நினைவேந்தலுக்குத் தடை! : சிங்கள ஆட்சியில் இருக்கிறோமா? – இலக்குவனார் திருவள்ளுவன்
நினைவேந்தலுக்குத் தடை! : சிங்கள ஆட்சியில் இருக்கிறோமா? இறந்தவரைப் போற்றுவது என்பது உலகம் தோன்றியது முதலே உலக மக்களிடம் இருக்கும் பழக்கம். தமிழ் மக்கள் இந்தப் பண்பாட்டில் திளைத்தவர்கள். எனவே, இறந்தவர்களைத் தெய்வமாகக் கருதி வணங்கும் பண்பாடு காலந்தோறும் நிலைத்து நிற்கிறது. இன்று நாம் வணங்கும் தெய்வம் பலவும் வழி வழி, வழிபட்ட இறந்தவர்களே! துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. (திருவள்ளுவர், திருக்குறள் 42) என இறந்தவரைப் போற்றல் இல்லறத்தான் கடமை என்கிறது உலகப்பொதுநூல். இறந்தபின்னர் எவ்வாறு துணை…
மேத்தியூ இலீ ஐ.நா-விலிருந்து நீக்கப்பட்டதைக் கண்டித்துக் கூட்டம்!
ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்த மேத்தியூ இலீ ஐ.நா.-விலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்துக் கண்டனக் கூட்டம்! ஐ.நா-விற்குள் நடக்கும் ஊழல்களையும், முறைகேடுகளையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்த அகநகர் இதழியம் (Inner city press) என்ற இதழையும் அதன் ஆசிரியரான மேத்தியூ இலீ அவர்களையும் மிகக் கொடுமையாக வெளியேற்றிய ஐ.நா-வைக் கண்டித்துக் கடந்த மாசி 22, 2047 / ௫-௩-௨௦௧௬ (05.03.2016) அன்று மாலை, சென்னை எழும்பூர் இக்சா அரங்கத்தில் கண்டனக் கூட்டத்தை மே பதினேழு இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்…
அணுஆற்றல் எதிர்ப்புப் போராட்ட ஆதரவுக்கூட்டம்
தை 10, 2047 / சனவரி 24, 2016 சென்னை மே 17 இயக்கம் சட்டப்பஞ்சாயத்து இயக்கம் பூவுலகின் நண்பர்கள் சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்கம்
ஈழமும் தமிழகமும் கருத்தரங்கம் – மே 17 இயக்கம்
ஆவணி 05, 2046 / ஆகத்து 22, 2015 மாலை 5.00 சென்னை ஈழம் குறித்த கருத்தரங்கம் வரும் சனிக்கிழமை மாலையில் சென்னையில் நிகழ்கிறது. கடந்த சில வருடங்களில் நமக்கு எதிராக இந்தியாவும், பன்னாடுகளும் முன்னெடுத்த நகர்வுகள் குறித்தும், தமிழர்களின் எதிர் செயல்பாடுகளும் அதற்கான தேவை குறித்தும் ஆய்வரங்கம். ஈழவிடுதலைப் போராட்டத்தைக் குறித்த நமது செயல்பாடுகளைப் பின்னுக்குத்ளதள்ளும் இந்தியாவின் தொடர் செயல்பாடுகளை வீழ்த்துவோம். ஈழம் குறித்த விவாதத்தையும், அடுத்த மாதம் ஐ.நாவின் மனித உரிமை அமர்வில் அளிக்கப்படும் அறிக்கை குறித்தும் விவாதிப்போம். வாய்ப்பிருக்கும்…