திருமுறையின் காலம் தமிழிசையின் எழுச்சிக் காலம் – புலவர் செந்துறைமுத்து
திருமுறையின் காலம் தமிழிசையின் எழுச்சிக் காலம் சங்கக்காலத்தைத் தமிழிசையின் வளர்ச்சிக் காலம் எனவும் இடைக்காலத்தை தமிழிசையின் எழுச்சிக் காலம் எனவும் கூறுவது பொருந்தும். ஏனென்றால், இடைக்காலத்தில் தமிழிசை மங்கி ஒடுங்கும் சூழ்நிலை ஏற்பட்டது. வடபுலத்திலிருந்து தமிழகம் போந்த சமய, பௌத்த சமயவாதிகளாலும் சமணம் சார்ந்த மன்னர்களாலும் தமிழிசை ஒடுக்கப்பட்டது. “இசையும் கூத்தும் காமம் விளைக்கும்” எனக் கூறித் தமிழிசையை மங்கச் செய்தனர்கள். அவ்வாறே தமிழர் சமயமாகிய சைவ சமயத்திற்கும் கேடு செய்தனர். சமணர்கள் சைவ சமயத்துக்கும் தமிழிசைக்கு எதிரிகளாக நின்றனர். அதன் விளைவாகத்…
தெலுங்கு, மொழி வடிவம் பெறுவதற்கு முன்னரே தமிழில் இசைக்கலை வளமுற்றிருந்தது!
தெலுங்கு, மொழி வடிவம் பெறுவதற்கு முன்னரே தமிழில் இசைக்கலை வளமுற்றிருந்தது! கருநாடக இசை தமிழிசையின் ஒரு கிளையே அல்லது திரிபேயாகும். தெலுங்கு நாட்டில் என்றுமே அது காணப்படாதது மட்டுன்று, தெலுங்கு மொழியின் பெயர், வரலாற்றில் தோன்றுவதற்கு முன்பிருந்தே தமிழ்நாட்டில் அதன் அரங்குகளும் அதன் முழு இசையியக்கமும் சிறந்து விளங்கின. சிலப்பதிகாரம் தமிழிசையின் அறிவியல் விரிவையும் கலை உயர்வையும் கலையின் பழமையையும் நன்கு எடுத்துக்காட்டுகின்றது. இந்நூலுக்கு உரை வகுத்த உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் … … காலத்திலும் சிலப்பதிகாரத்திற்கு உதவியாகவிருந்த இசையிலக்கண நூல்களும் இலக்கிய…