திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 48, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 48 கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கேள்வி, குறள் எண்: 414) அறிவு நூல்களைக் கற்கும் வாய்ப்பை இழந்தாலும் அவ்வாறு கற்றவர்களிடம் கேட்டறிக! இது தளர்ச்சியின் பொழுது ஊற்றுநீர்போல் பெருகித் துணை நிற்கும் என்கிறார் திருவள்ளுவர். தயான்னே சில்லிங்கு(Dianne Schilling) முதலான கல்வியாளர்கள்…
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 47, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 47 செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின் ஆன்றாரோ டொப்பர் நிலத்து (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கேள்வி, குறள் எண்: 413) செவி உணவாகிய கேள்வியறிவைப் பெறுபவர்கள் அவி உணவு கொள்ளும் ஆன்றோர்க்கு இணையாக மதிக்கப்படுவர் என்கிறார் திருவள்ளுவர். உணவு, பண்பை வரையறுக்கிறது என இவான் திமித்திரசெவிக்கு(Ivan Dimitrijevic) முதலான பல வலைத்தளங்களில்…
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 46, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 46 செவிக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கேள்வி, குறள் எண்: 412) செவிக்கு உணவாகிய கேள்வியறிவு இல்லாதபோது வயிற்றுக்கும் சிறிது உணவு அளிக்கப்படும் என்கிறார் திருவள்ளுவர். உணவு அளவு, உணவின் தன்மை ஆகியவற்றிற்கும் காம உணர்விற்கும் தொடர்பிருப்பதாகப் பாலியற் கல்வியாளர் முனைவர் மாரியன்…
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 45, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 45 செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கேள்வி, குறள் எண்: 411) செல்வங்களுள் சிறப்புடையது செவிச்செல்வம். அது எல்லாச் செல்வங்களிலும் தலைமையானது என்கிறார் திருவள்ளுவர். கல்வியின் சிறப்பையும் கல்லாமையின் இழிவையும் கூறிய திருவள்ளுவர் அடுத்துக் கேள்வியை வைத்துள்ளார். கேள்வி என்றால் வினா என்று…
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 44 விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்லாமை, குறள் எண்: 410) சிறந்த நூல்களைக் கற்றவர்களே மக்கள். கற்காத மற்றவர்கள் விலங்கிற்கு ஒப்பாவர் என்கிறார் திருவள்ளுவர். “கல்வி கற்காத மனிதர்கள் புதிய விலங்கிற்குச் சமமாவர்” என்று கூறிக் கல்வியை அரசறிவியலறிஞர்கள் வலியுறுத்துகின்றனர். அனையர்…
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 43, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 43 மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்திலர் பாடு (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்லாமை, குறள் எண்: 409) செல்வம், செல்வாக்குடன் மேலான நிலையில் பிறந்திருந்தாலும் கல்வியறிவில்லாதவர் அவர்களைவிடக் கீழான நிலையில் பிறந்த கற்றவர்க்கு ஈடாகமாட்டார் என்கிறார் திருவள்ளுவர். “அனைத்திலர் பாடு” என்றால் “அவ்வளவு பெருமை இல்லாதவர்” என்று பொருள்….
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 42, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 42 நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே கல்லார்கண் பட்ட திரு (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்லாமை, குறள் எண்: 408) நல்லவர் அடையும் வறுமையினும் துன்பம் தருவது கல்லாதவரிடம் சேரும் செல்வம் என்கிறார் திருவள்ளுவர். கல்லாதவரிடம் சேரும் செல்வம் அரசிற்குப் பாரமே என்கின்றனர் அரசியலறிஞர்கள். கல்லாதாரிடம் சேரும் செல்வத்தைக் குறிப்பிடுவதால் நல்லார்…
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 41, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 41 (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் மண்மாண் புனைபாவை அற்று (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்லாமை, குறள் எண்: 407) நுட்பமும் சிறப்பும் மிக்க கல்வி இல்லாதவன் அழகு, மண்ணால் அழகாகச் செய்யப்பெற்ற பொம்மையைப் போன்றதே என்கிறார் திருவள்ளுவர். “அழகு என்பது ஒயிலான முகமல்ல. ஒயிலான அறிவே” என்றும் “கல்லாதவன்…
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 40 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 40 உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக் களர்அனையர் கல்லா தவர் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்லாமை, குறள் எண்: 406) கல்லாதவர் ஏதோ இருக்கின்றார் என்று சொல்லும் நிலையில் யாருக்கும் பயன்படாத களர்நிலம்போல் இருப்பர் என்கிறார் திருவள்ளுவர். ‘விடுதலையின் மறைபொருள் மக்களைக் கற்றவாராக்குவது; கொடுங்கோன்மையின் மறைபொருள் அவர்களை அறியாமையிலேயே வைத்திருப்பது” என்கிறார்…
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 39 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 39 கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்லாமை, குறள் எண்: 405) கல்லாத ஒருவனின் பெருமை அவன் கற்றவர்முன் பேசும்பொழுது மறைந்து விடும் என்கிறார் திருவள்ளுவர். ‘தகைமை’ என்பதற்கு மதிப்பு, பெருமை, தன்னைப் பெருமையாக எண்ணிக் கொள்ளும் மனப்பான்மை எனப் பல பொருள்கள்…
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 38 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 38 கல்லாதான் ஒட்பம் கழியநன்று ஆயினும் கொள்ளார் அறிவுடை யார். (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்லாமை, குறள் எண்: 404) கல்லாதவரின் மதிநலம் மிகச் சிறப்பாக இருந்தாலும் கற்றவர் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டார் என்கிறார் திருவள்ளுவர். நாட்டை வழிநடத்துவதற்குப் படிக்காதவனின் பட்டறிவு பயனுள்ளதாக இருந்தாலும் கற்றவர்கள் அதைப் பொருட்படுத்த மாட்டார்கள் என்கின்றனர் அரசியலறிஞர்கள்….
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 37 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 37 கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன் சொல்லாது இருக்கப் பெறின் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்லாமை, குறள் எண்: 403) கற்றவர் முன்னிலையில் பேசாமல் இருப்பின் கற்காதவரும் மிகவும் நல்லவரே என்கிறார் திருவள்ளுவர். கல்வியறிவற்றவன் இன்று கேட்கும் வினாவிற்கான விடையைக் கற்றறிந்தவர் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லிவிட்டனர் என்கிறார் அரசியல்வாதியான…