திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 36, – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 36 கல்லாதான் சொல் காமுறுதல் முலைஇரண்டும் இல்லாதாள் பெண் காமுற்றற்று. (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்லாமை, குறள் எண்: 402) கல்லாதவன் சொல்ல விரும்புதல் கொங்கை இரண்டும் இல்லாதவள் பெண்மையை விரும்புவதுபோன்றது என்கிறார் திருவள்ளுவர். கற்றவர்கள் தங்கள் பேச்சால் பிறரைக் கவர்ந்து சிறப்பு எய்துகின்றனர். தங்கள் உரைகளால் புகழுறுகின்றனர். இதனைப் பார்த்துக்…
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 35, – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப்பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 35 அரங்குஇன்றி வட்டுஆடி அற்றே நிரம்பிய நூல்இன்றிக் கோட்டி கொளல். (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்லாமை, குறள் எண்: 401) நிறைந்த நூல்களைக் கற்காமல் அவையில் பேசுதல், வட்டாட்டத்திற்குரிய கட்டம் இன்றி வட்டாடுதலைப் போன்றது என்கிறார் திருவள்ளுவர். மக்களாட்சி நல்லது. ஆனால் படிக்காத மன்பதைக்கு அது நல்லதல்ல. ஏனெனில் அதற்கு எவ்வாறு புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுப்பது என்று தெரியாது என்கிறார் தெபாசிசு மிருதா(Debasish Mridha). கல்லாதவர்களை ஆட்சி செய்வது வல்லாண்மையர்க்கு(சர்வாதிகாரிக்கு) எளிது என்கிறார் ஆல்பெர்ட்டோ மங்குவெல்(Alberto Manguel). எனவே எல்லாத்…
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 34 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப்பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 34 கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்வி, குறள் எண்:400) ஒருவருக்குக் கேடற்ற சிறந்த செல்வம் கல்வியே ஆகும். கல்வியல்லாத பிற செல்வமல்ல என்கிறார் திருவள்ளுவர். கல்வியே மிகு உயர் செல்வம்(highest wealth) என்கிறார் இங்கிலாந்து அரசியலறிஞர் ஒருவர். கல்விக்குப் பகைவராலோ, கொள்ளைக்காரர்களாலோ, வெள்ளத்தாலோ இயற்கைப் பேரிடர்களாலோ பகைகொண்ட உறவினராலோ ஆட்சியாளராலோ தீங்கு நேராது. எனவேதான் திருவள்ளுவர் கேடில் விழுச்செல்வம் என்கிறார். பிற பொருள்கள், இவற்றில் ஏதேனும் ஒன்றாலோ பலவாலோ…
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 33 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப்பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 33 தாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்வி, குறள் எண்:399) கல்வியின் பயனால் தாமும் உலகும் இன்புறுவது கண்டு கல்வியாளர்கள் கற்பதை விரும்புவர் என்கிறார் திருவள்ளுவர். ஆட்சியாளர்களுக்கு மட்டுமல்லாமல் மக்களுக்கும் இன்பம் தரக்கூடியவற்றைச் செய்ய வேண்டும் என அரசிலறிவியலாளர்கள் கூறுகின்றனர். கற்பதால் தமக்கும் பிறருக்கும் வரும் இன்பம் கண்டு மேலும் மேலும் அந்த இன்பத்தை விரும்பிக் கற்பர் என்று விளக்குவோர் உள்ளனர். இன்பத்திற்குக் காரணமான கல்வியை விரும்பி மேலும்…
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 32 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப்பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 32 ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்வி, குறள் எண்:398) ஒருமை உணர்வுடன் கற்கும் கல்வி எப்பொழுதும் பாதுகாப்பு தரும் எனத் திருவள்ளுவர் கூறுகிறார். கல்வியின் பயன் ஒருமுறையின்றித் தொடர்ந்து பயன் தரும்; ஆதலின் ஆட்சியாளர்கள் கல்வியில் சிறந்திருக்க வேண்டும் என்பது அரசறிவியல் கருத்து. குறள்நெறிச் செம்மல் பேரா.சி இலக்குவனார், எழுமை=மிகுதி எனப் பொருளைக் கையாண்டு சிறப்பாகவும் சரியாகவும் உரை எழுதியுள்ளார். உரையாசிரியர்கள் சிலர் ஒருமை என்பதற்கு ஒரு பிறப்பு என்றும் எழுமை…
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 31 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 31 யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்வி, குறள் எண்:397) கற்றவனுக்கு எல்லா நாடும் ஊரும் தன் நாடாகவும் ஊராகவும் திகழும். பிறகு ஏன் சாகும்வரை கற்காமல் இருக்கிறான் எனத் திருவள்ளுவர் கேட்கிறார். “கற்றவர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு” என்கிறார் ஒளவையார்(மூதுரை) கற்றவரை அவர் நாட்டு ஆள்வோரும் சிறப்பிப்பர். அவர் செல்லும் நாடுகளிலும் மதித்துப் போற்றுவர். ஆனால் ஆட்சித் தலைவர்க்கு உள்நாட்டில் இருக்கும் மதிப்பு அயல்நாடுகளில் இருப்பது இல்லை. கற்றவர் எந்த நாட்டிற்குச்…
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 30 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 30 தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு. (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்வி, குறள் எண்:396) மணற்கேணியில் தோண்டும் அளவிற்கேற்ப நீர் ஊறுவதுபோல் கற்கும் அளவிற்கேற்ப அறிவு சுரக்கும் என்கிறார் திருவள்ளுவர். நீர்நிலை வகைகள் எண்ணற்று உள்ளன. அவற்றுள் நீர் சுரந்து அமையும் நீர்நிலைகளில் முதன்மையாகக் கிணறும் மணற்கேணியும்…
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 29 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும்கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும்குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார்.அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 29 உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார் கடையரே கல்லா தவர் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்வி, குறள் எண்:395) பொருள் உடையவர் முன் இல்லாதவர் பணிந்து நின்று பெறுவதுபோல் கல்வியறிவு உடையவர் முன் பணிந்து கற்க வேண்டும். அவ்வாறு கற்காதவர் இழிந்தவர் என்கிறார் திருவள்ளுவர். கல்வியியல் அரசியலையும் அரசியல் கல்வியியலையும் பாதிக்கின்றன. கற்றவரே முன்னிலையில் இருப்பர் என அரசறிவியலாளர் கூறுகின்றனர். அதுபோல் கல்லாதவரைக் கடையராகத் திருவள்ளுவர் கூறுகிறார். ஏக்கற்று என்றால் ஏக்கமுற்று எனச் சிலர் பொருள் கொள்கின்றனர். ஏக்கறுதல் –…
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 28 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 28 உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்வி, குறள் எண்:394) மகிழுமாறு கூடி நினைக்குமாறு பிரிதலே கல்வியாளர் தொழில் என்கிறார் திருவள்ளுவர். அரசறிவியலில் கல்வி வலியுறுத்தப்படுவதால், கல்வியாளர் இயல்பைத் திருவள்ளுவர் இங்கே கூறுகிறார். உவப்ப என்றால் மகிழும்படி, தலைக்கூடி என்றால் ஒன்று சேர்ந்து அல்லது…
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 26– இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 26 எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்என்ப வாழும் உயிர்க்கு (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்வி, குறள் எண்:392) எண்ணும் எழுத்தும் வாழும் உயிர்க்குக் கண்கள் என்கிறார் திருவள்ளுவர். அரசியல் அறிவியல் என்பது அரசாங்கம், அரசியல் பொருளாதாரம் என்பவற்றை வளம், உயிரியல் வாழ்க்கை, இயற்கணிதம், வரைகணிதம், விண்வெளி போன்றவற்றோடு தொடர்புபடுத்திப் படிப்பதாகும்…
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 25 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 25 கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்வி, குறள் எண்:391) கற்கத் தகுந்த நூல்களைத் தவறின்றிக் கற்க வேண்டும். கற்றபின் அதன்படிக் கற்றவழியில் செல்ல வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். அரசியல் நெறியைக் கற்று அதன்படி ஆட்சியை நடத்த வேண்டும் என்கின்றனர் அரசறிவியலாளர்கள்….
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 24 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 24 ‘கல்வி ‘ அதிகாரத்தின் சிறப்பு அடுத்து வருவது ‘கல்வி’ என்னும் அதிகாரம். கல்விக்கு மிகுதியாகச் செலவழிக்கும் அரசே நல்லரசு என்பது அரசறிவியலாளர்கள் கூற்று. கல்வியில்லா நாட்டில்தான் கடுங்கோன்மை தழைக்கும். எனவேதான் அரசறிவியலாளர்கள் அரசியலில் கல்விக்கும் முதன்மை அளிக்கின்றனர். எனவேதான் திருவள்ளுவர் பொருட்பாலில் அரசியலில் அரசின் தலைமையைக் கூறும் இறைமாட்சிக்கு அடுத்துக்…