குறள் கடலில் சில துளிகள் 29. – பெரியாரைப் பேணுக! – இலக்குவனார் திருவள்ளுவன்
(குறள் கடலில் சில துளிகள் 28 – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 29 . பெரியாரைப் பேணுக அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல். (திருவள்ளுவர், திருக்குறள், பெரியாரைத் துணைக்கோடல், குறள் எண் ௪௱௪௰௩ – 443) பதவுரை: அரியவற்றுள்-அருமையானவற்றுள், (அருமையான பேறுகளுள்); எல்லாம்-அனைத்தும்; அரிதே-அருமையானதே; பெரியாரை-பெருமையுடையவரை; பேணி-விரும்பி; நலன்பாராட்டி; உவப்பன செய்து; தமர்-தம்மவர்; தமக்கு நெருக்கமான உறவினர், தமக்குச் சிறந்தாராக; கொளல்-கொள்க. பொழிப்புரை : பெரியோரையே விரும்பித் தமக்குரிய சுற்றத்தினராகப் பெற்றுக் கொள்ளுதல், பெறுதற்கரிய பேறுகளுள் எல்லாம்…
? 62 . திருவருட்பாவைத் தமிழ்ச்சனாதனம் எனச் சேக்கிழான் என்பவர் கூறுகிறாரே! – இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 60-61 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 62 வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன்; பசியினால் இளைத்தே வீடுதோ ரறிந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்! நீடிய பிணியால் வருந்துகின் றோர்என் நேர்உறக் கண்டுளந் துடித்தேன்; ஈடின்மா னிகளாய் ஏழைகளாய்நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்! (திருவருட்பா- 3471) அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி. (திருக்குறள் – 226) பொருளைச் சேமிக்குமிடம் வைப்பகமோ வங்கியோ வேறு சேமிப்பகமோ அல்ல. ஒன்றுமில்லாதவரின் கொடும் பசியை நீக்குவதே பொருளைச் சேமிக்கும் இடம் என்கிறார் திருவள்ளுவர். இது…
பொருள் அறிவியலிலும் சிறந்திருந்தனர், அன்றே சொன்னார்கள், இலக்குவனார் திருவள்ளுவன்
(புலம் பெயர் பறவைகள் – அன்றே சொன்னார்கள் – தொடர்ச்சி) பொருள் அறிவியலிலும் சிறந்திருந்தனர் பொருள் அல்லது செல்வம் என்றாலே அதனால் வரும் தீமைகளை மட்டும் எண்ணி அதனை ஒதுக்க வேண்டும் என்பது போன்றே உலகெங்கும் அறிஞர்களும் ஆன்றோர்களும் வலியுறுத்தி வந்துள்ளனர். புத்தர் முதலான சமய அறிஞர்களும் அவ்வாறே மக்களிடம் பொருளாசை துன்பம் தரும் எனக் கூறிப் பொருள் தேடலுக்கு எதிரான கருத்தையே பரப்பி வந்தனர். பொருள் அடிப்படையிலான இயல் பொருளறிவியல் அல்லது பொருளியல் (பொருளாதார இயல்) என உருவானதும் அதன் இன்றியமையாமை உணரப்பட்டதும்…
சங்கப் புலவர்கள் பொன்னுரை – 13: உழவும் தொழிலும் சிறக்கட்டும்; செல்வம் பெருகட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
(சங்கப்புலவர்கள்பொன்னுரை – 12 : அறநெறியே ஆட்சியின் வெற்றிக்கு அடிப்படை! – தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 13 உழவும் தொழிலும் சிறக்கட்டும்; செல்வம் பெருகட்டும்! “நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க…” ஐங்குறுநூறு – 1, 2திணை: மருதம்பாடியவர்: ஓரம்போகியார் பொருள்: உணவுக் கூலங்கள் (தானியங்கள்) பொலியட்டும் தொழற்கருவிகளுக்கான மாழைகள் (உலோகங்கள்) பெருகட்டும். பண்டைத் தமிழ்நாட்டின் நாகரிக உயர்வையும் பண்பாட்டுச் சிறப்பையும் வரலாற்றுக் கூறுகளையும் விளக்குவன சங்க இலக்கியங்கள் என்பார் செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார். எட்டுத் தொகையும் பத்துப்…
சங்கப்புலவர்கள்பொன்னுரை – 12 : அறநெறியே ஆட்சியின் வெற்றிக்கு அடிப்படை! – இலக்குவனார் திருவள்ளுவன்
(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 11 : யார் யாரையோ இணைப்பது அன்புதான்! –தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 12 அறநெறியே ஆட்சியின் வெற்றிக்கு அடிப்படை! “அறநெறி முதற்றே அரசின் கொற்றம்” – புறநானூறு 55, 10. திணை : பாடாண்திணை துறை : செவியறிவுறூஉ பாடியோர் : மதுரை மருதன் இளநாகனார் பாடப்பட்டோன் : பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் (இம்மன்னன் குறித்துச் சங்கப்புலவர்கள் பொன்னுரை – 2 இல் குறித்துள்ளோம்.) கொற்றம் என்றால் வெற்றி என்று பொருள். அரசியலாட்சி என்றும் பொருள். ஆனால் அரசின் கொற்றம் என வருவதால் இங்கே அது…
சங்கப்புலவர்கள் பொன்னுரை – 10 : பசியும் நோயும் இல்லாமல் போகட்டும்!- இலக்குவனார் திருவள்ளுவன்
(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 9-தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 10 பசியும் நோயும் இல்லாமல் போகட்டும்! “பசி இல்லாகுக! பிணிசேண் நீங்குக” ஐங்குறுநூறு 5. 2 பதவுரை : பிணி – நோய்; சேண் நீங்குக – தொலைவிற்குச் செல்லுக; அஃதாவது இல்லாமல் போகுக. ஐங்குறுநூற்றுப் பாடலில் புலவர் ஓரம்போகியார் “பசி இல்லாகுக! பிணிசேண் நீங்குக” என வாழ்த்துகிறார். பசி இல்லாமல் ஆவதும் நோய் தொலைவில் நீங்குவதும் இயல்பாக நடைபெறுமா?…
சங்கப் புலவர்கள் பொன்னுரை – 9 : பெண்களைப் போற்றிய தொல்காப்பியர்! – இலக்குவனார் திருவள்ளுவன்
(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 8 – தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 9 பெண்களைப் போற்றிய தொல்காப்பியர்! “செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும் அறிவும் அருமையும் பெண்பா லான “ (தொல்காப்பியம், பொருளதிகாரம், பொருளியல், நூற்பா 15) “செறிவு என்பது அடக்கம்; நிறைவு என்பது அமைதி; செம்மை என்பது மனங்கோடாமை; செப்பு என்பது சொல்லுதல்; அறிவு என்பது நன்மை பயப்பனவுந் தீமை பயப்பனவும் துணிதல்; அருமை என்பது உள்ளக் கருத்து அறிதலருமை” என்று இளம்பூரணர் உரை வகுத்துள்ளார். செப்பும் என்பதற்குக் கூறத் தகுவன கூறலும் என்கிறார் பேரா.முனைவர்…
நாலடி நல்கும் நன்னெறி 7 : பயனின்றிச் சேர்ப்போர் இழப்பர் – இலக்குவனார் திருவள்ளுவன்
(நாலடி நல்கும் நன்னெறி 6 – பயன்பாடு இல்லாப் பொருளால் என்ன பயன்? – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 7 பயனின்றிச் சேர்ப்போர் இழப்பர் உடாஅதும் உண்ணாதும் தம்உடம்பு செற்றும் கெடாஅத நல்லறமும் செய்யார் – கொடாஅது வைத்தீட்டி னார்இழப்பர், வான்தோய் மலைநாட ! உய்த்தீட்டும் தேனீக் கரி. -நாலடியார், செல்வம் நிலையாமை, 10 பொருள்: நல்ல ஆடைகளை உடுத்தாமலும் சுவையான உணவுகளை உண்ணாமலும் வறுமையாளர்களுக்குக் கொடுக்காமலும் அழியாக நல்லறச் செயல்கள் செய்யாமலும் உடலை வருத்திச் செல்வத்தை வெறுமனே சேர்த்து வைப்பவர் அதனை…
நாலடி நல்கும் நன்னெறி 6 – பயன்பாடு இல்லாப் பொருளால் என்ன பயன்? : இலக்குவனார் திருவள்ளுவன்
(நாலடி நல்கும் நன்னெறி 5 – நிலை புகழ் தரும் செயல் ஆற்றுக – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 6 பயன்பாடு இல்லாப் பொருளால் என்ன பயன்? உண்ணான் ஒளிநிறான் ஓங்கு புகழ்செய்யான் துன்னருங் கேளிர் துயர்களையான் – கொன்னே வழங்கான் பொருள்காத் திரும்பானேல், அ ஆ இழந்தான்என் றெண்ணப் படும். -நாலடியார், செல்வம் நிலையாமை, 9 பொருள்: தான் உண்ணாதவனாக, மதிப்பைக் காக்காதவனாக, புகழ்மிகு செயல் செய்யாதவனாக, உறவினர்களின் துன்பங்களைப் போக்காதவனாக இரப்பவர்க்குக் கொடுக்காதவனாக வீணாகப் பொருளை வைத்திருந்து என்ன பயன்?…
சங்கப் புலவர்கள் பொன்னுரை – 8 : பிறர் துன்பம் துடைத்தலே உண்மைச் செல்வம்! – இலக்குவனார் திருவள்ளுவன்
(சங்கப் புலவர்கள் பொன்னுரை 7 – தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 8 பிறர் துன்பம் துடைத்தலே உண்மைச் செல்வம்! “நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் செல்வம் அன்றுதன் செய்வினைப் பயனே” – மிளைகிழான் நல்வேட்டனார் (நற்றிணை 210: 5-6) அரசின் பாராட்டுரையும் ஆடம்பரப் போக்குவரத்து வசதிகளும் செல்வமன்று. இவை நம் செயல்களால் கிடைப்பவை! நெடிய மொழிதல்…
சங்கப் புலவர்கள் பொன்னுரை – 7 : உதவியவர்க்கு உதவாதவன் தேய்வான்! – இலக்குவனார் திருவள்ளுவன்
(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 6 தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 7 உதவியவர்க்கு உதவாதவன் தேய்வான்! “ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான்; மற்று அவன்எச்சத்துள் ஆயினும், அஃது எறியாது விடாதே காண்” கலித்தொகை 149 : 6 – 7 கலித்தொகை – நெய்தற் கலி பாடியவர் – நல்லந்துவனார் திணை – மருதம் கி.மு. காலத்துப் பாடல் ஒற்கம் என்றால் வறுமை. தான் வறுமையுற்றபோது அத்துன்பம் நீக்க உதவியவருக்கு அவருக்குத் துன்பம்…
யானையியல் – இலக்குவனார் திருவள்ளுவன், புதிய அறிவியல்
யானையியல் (யானை) இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்னும் பழமொழி யானையின் மதிப்பை வெளிப்படுத்தும். யானைக்கு வேழம், களிறு(ஆண் யானை), பிடி(பெண் யானை), எறும்பி, கடிறு, கடவை, முதலான பல பெயர்கள் உள்ளன. தும்பி, கரிணி, தோல், கண் டாலி,கும்பி, கறையடி, குஞ்சரம், பகடு,களிறு, பூட்கை, கரி,மா தங்கம்,வழுவை, வேழம், வாரணம், மொய்யே,உம்பல், எறும்பி, உவாவே,பொங்கடி,தந்தி, அத்தி, கடிவை, கயமே,நாகம், சிந்துரம், தூங்கல், நிருமதம்,புழைக்கை, வல்விலங்கு, நால்வாய், புகர்முகம்மதாவளம், தந்தா வளம்,மருண் மாவே,கைம்மா(ப்), பெருமா, மதமா, வயமா,மத்த மா,வே மதகயம், ஆம்பல்,இபம்(ஏ),…