ஊரும் பேரும் – திரு.வி.க. அவர்களின் முகவுரையும் ஆசிரியர் இரா.பி.சேது நன்றியுரையும்
தமிழகம் ஊரும் பேரும் முகவுரை உலகை ஒழுங்கு முறையில் இனிது நடாத்தி வரும் அமைப்புகள் பலப்பல. அவற்றுள் உயிர்ப்பாய்த் திகழ்வது ஒன்று. அது நூல் என்பது. நூலின் உள்ளுறை யாது? அறிவு. ஆதலின், நூல் அமைப்பை அறிவுச் சுரங்கம் என்று கூறலாம். நூல்கள் பல திறம். பல திறத்துள் இரவியும் தனித்தும் நிற்பது வரலாறு. வரலாறு வான் போன்றது. வான் மற்றப் பூதங்களிற் கலந்தும், அவற்றைக் கடந்து தனித்தும் நிற்பதன்றோ? “ஊரும் பேரும்” என்னும் இந் நூல் வரலாற்றின்பாற்பட்டது. இவ் வரலாறு தமிழ் நாட்டின்…
தமிழ்த் தென்றல் – கி.ஆ.பெ. 1/2
தமிழ்த் தென்றல் தமிழ்த் தென்றல் திரு. வி. க. அவர்கள் தமிழ்த். தொண்டு, தொழில் தொண்டு, சமயத்தொண்டு, அரசியல் தொண்டு, சமூகத் தொண்டு ஆகிய ஐவகைத் தொண்டும் தன்னலங் கருதாது செய்து வந்த தமிழகத்தின் தனிப் பெருந்தலைவர். பிற்காலத்தில் இத்தனையிலிருந்தும் ஒய்வு எடுத்துக் கொண்டு, இராயப்பேட்டையிலுள்ள அச்சகத்தில் தன் தமையனார் உலகநாத(முதலியா)ர் அவர்களுடன் இருந்து, எழுத்துப்பணி புரிந்தபொழுது நான் அடிக்கடி அவர்களைச் சந்தித்துப் பேசி மகிழ்வதுண்டு. மாறுபட்ட கட்சியினரிடத்தும், மாறுபட்ட கொள் கையுடையவர்களிடத்தும் சிறிதும் வெறுப்படையாமல் மனம் திறந்து பேசி மகிழ்ச்சியடையும் பெருங்குணத்தை, அவரிடம்…
மறைமலையடிகள் 4/5 – கி.ஆ.பெ.
(மறைமலையடிகள் 3/5 – கி.ஆ.பெ . : தொடர்ச்சி) மறைமலையடிகள் 4/5 45 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை இராயப்பேட்டை பாலசுப்பிரமணிய பக்த சன சபையில் மறைமலையடிகளார் பேசுகின்றபொழுது “கடவுள் நம்பிக்கை வர வரக் குறைந்து வருகிறது. கடவுள் இல்லை என்பவரும் உயிரோடுதான் இருந்து கொண்டிருக்கிறார்கள். நீங்களும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்று கூறினார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த சிதம்பரம் என். தண்டபாணி(ப் பிள்ளை)யும், ச.ச.(J.S.) கண்ணப்பரும் “பெரியாரைக் கொலை செய்யச் சொல்லி மறைமலையடிகள் மக்களைத் தூண்டுகிறார்” என நீதிமன்றத்தில் ஒரு வழக்கைப் போட்டுவிட்டார்கள். நான் அதுசமயம்…
பேராசிரியர் சி.இலக்குவனாரின் திருக்குறள் உரைச் சிறப்பு 1/2 : செ. இரவிசங்கர்
பேராசிரியர் சி.இலக்குவனாரின் திருக்குறள் உரைச் சிறப்பு 1/2 முன்னுரை: திருக்குறளுக்கு உரையெழுதிய பலருள் சி.இலக்குவனாரும் ஒருவர். தமிழுக்காகப் பணி செய்த மாபெரும் அறிஞர் இலக்குவனார் என்பதை இரா.நெடுஞ்செழியனாரின் கூற்றின் முலம் அறியலாம். “இலக்குவனாரின் தமிழறிவும்ஆற்றலும், துணிவும், திறமையும், அஞ்சாநெஞ்சமும், அன்புள்ளமும், விடா முயற்சியும், தொண்டு புரியும் சிறப்பும், தமிழுக்காகவும், தமிழர்க்காகவும் பாடுபடும் தன்மையும் பாராட்டிப் போற்றத்தக்கனவாகும்” என்கிறார். இது முற்றிலும் உண்மையாகவே அவரது தமிழ்ப்பணியைப் பார்க்கும்போது தெரிகிறது. இவ்வளவு திறமையும் உழைப்பும் கொண்ட இலக்குவனாரின் பணிகளுள் திருக்குறளுக்கு இயற்றியுள்ள உரைப் பணி போற்றத்தக்கதாகும். …
பிறர்க்காக வாழ்வதே வாழ்வாகும் – திரு.வி.க.
பிறர்க்காக வாழ்வதே வாழ்வாகும் – திரு.வி.க. மனிதன் எத்தகைய வழக்க வொழுக்கமுடையனாயினும் ஆக; எத்தகையத் தொழின் முறையின் ஈடுபட்டவனாயினும் ஆக; அரசனாயிருப்பினும் இருக்க; ஆண்டியாயிருப்பினும் இருக்க; நீதிபதி தொழில் செய்யினுஞ் செய்; வாயில்காப்பு வேலை புரியினும் புரிக; எவரெவர் எந்நிலையில் நிற்பினும் நிற்க; எக்கோலங் கொள்ளினுங் கொள்க. மெய்யறிவு என்னும் ஞானம்பெற எவருங் காட்டுக்குப் போக வேண்டியதில்லை. நடு நாட்டில் மனைவி மக்கள் உற்றார் பெற்றார் உறவினர் இவரோடு வாழ்ந்தும், பலவகைத் தொழில்களைச் செய்தும் ஞானியாகவே இருக்கலாம். வேண்டு ஒன்றே; அது, நாம் பிறர்க்காக…
திருவள்ளுவர் நூல் முப்பால் உலகுக்குப் பொது – தமிழ்த்தென்றல் திரு.வி.க.
திருவள்ளுவர் நூல் முப்பால் உலகுக்குப் பொது திருவள்ளுவர் நூல் அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால் என்ற முப்பாலால் ஆக்கப்பட்டது. அறமும் பொருளும் காதலும் ஒரு வகுப்பார்க்கோ ஒரு மதத்தார்க்கோ ஒரு நிறத்தார்க்கோ ஒரு மொழியார்க்கோ ஒரு நாட்டார்க்கோ உரியன அல்ல. அவை மன்பதைக்கு – உலகுக்குப் பொது. திருவள்ளுவர் என்னும் நினைவு தோன்றும் போதே, உலகமும் உடன் தோன்றுகிறது. இவ்வாறு தோன்றுதற்குக் காரணமென்ன? திருவள்ளுவர் உலகையே குறளாக எழுதினார். உலகின் எழுத்தோவியம் திருக்குறள் என்று கூறலாம். திருவள்ளுவர் உலகுக்கு என்றே பயின்றார்; உலகுக்கு என்றே வாழ்ந்தார்;…
திருக்குறளின்படி ஒழுகுங்கள்! – திரு.வி.க.
திருக்குறளின்படி ஒழுகுங்கள்! தமிழ்நாட்டுச் செல்வர்களே! நீங்கள் பிறந்த நாடு, திருவள்ளுவர் பிறந்தநாடு. அப்பெரியார் நூல் உங்கள் கையில் விளங்குகிறது. அதுவே உங்களுக்கு உரிமை கொடுக்குங் கருவி. அதை ஓதுங்கள்; அதன்படி ஒழுகுங்கள்; ஒத்துழையாமையின் பொருளை ஓருங்கள். ஐம்பெரும் பாவத்துடன் ஒத்துழையாமை என்பதே அதன் பொருள். விரிந்து பரந்த நாடுகளை ஆளும் முறையில் ஐந்து பாவங்கள் புத்த பூர்வமாகவோ அபுத்தி பூர்வமாகவோ நிகழ்ந்துவிடும். ஆதலால், அப்பாவங்கள் நிகழாதவாறு காத்துக்கொள்ளும் கிராம ஆட்சியைபழைய கிராமப் பஞ்சாயத்தை தொழிலாளர் ஆட்சியை பொருளில் பிறந்து, அறத்தில் அமர்ந்து, இன்பத்தை ஈந்து,…
இனிதே இலக்கியம் 2 போற்றி! போற்றி! – இலக்குவனார் திருவள்ளுவன்
பண்ணினை இயற்கை வைத்த பண்பனே போற்றி போற்றி பெண்மையில் தாய்மை வைத்த பெரியனே போற்றி போற்றி வண்மையை உயிரில் வைத்த வள்ளலே போற்றி போற்றி உண்மையில் இருக்கை வைத்த உறவனே போற்றி போற்றி இறைவனைப் பொதுவான பண்புகள் அடிப்படையில் போற்றும் தமிழ்ப்பாடல்கள் எச்சமயத்தவரும் எக்கடவுளை வணங்குவோரும் ஏற்கும் சிறப்பினைப் பெற்றுள்ளன. அந்த வகையில் தமிழ்த்தென்றல் திரு.வி.க. எனப்படும் திரு.வி.கல்ணயாண சுந்தரனாரால் எழுதப்பெற்ற ‘பொதுமை வேட்டல்’ என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்ட பாடல் இது. இயற்கையோடு இயைந்ததாக இசையை அமைத்த பண்பாளரே போற்றி! பெண்மையின்…
கீர்த்தனையால் விளைந்த நலன்சிறிது; தீங்கோ பெரிது! – திரு.வி.க.
தமிழ்நாடு விருந்தோம்புவதில் பெயர் பெற்றது. எல்லாத் துறைகளிலும் அது விருந்தோம்பியுள்ளது. தமிழ்நாடு கீர்த்தனை விருந்தையும் ஓம்பியது. கீர்த்தனையால் நாட்டுக்கு விளைந்த நலன் சிறிது; தீங்கோ பெரிது. கீர்த்தனை தமிழ்நாட்டில் கால் வைத்ததும் அதற்கு வரவேற்பு நல்கப்பட்டது. தமிழில் கீர்த்தனைகள் யாக்கப்பட்டன. அந்நாளில் பெரும்பெருஞ் சிங்க ஏறுகள் இருந்தன. முத்துத்தாண்டவர், கோபாலகிருட்டிண பாரதியார், அருணாசலக் கவிராயர் முதலியோர் பெருஞ்சிங்க ஏறுகளல்லவோ? அவர்களால் யாக்கப்பட்ட கீர்த்தனைகளில் பொருளும் இசையும் செறியலாயின… இந்நாளில் கலைஞரல்லாதாரும் கீர்த்தனைகளை எளிதில் எழுதுகின்றனர். அவை ஏழிசையால் அணி செய்யப்படுகின்றன. அவ்வணியைத்…
மூவாப்புகழ் மூவர் சிறப்பிதழ்
அகரமுதல 44 ஆம் இதழ் மூவாப்புகழுக்குரிய ஆன்றோர் மூவர் சிறப்பிதழாக வருகிறது. எனவே, வழக்கமான செய்திகளுடன் இம் மூவர் குறித்த படைப்புகளும் இடம் பெற்றுள்ளன.(இவ்விதழில் விடுபட்ட தொடர்கள் அடுத்த இதழில் வெளிவரும்.) செட்டம்பர்த் திங்களின் இவ்வாரத்தில் இதனைக் குறிப்பதால் யார் அந்த மூவர் என்பது அனைவருக்குமே தெரியும். ஆம்! பாட்டுக்கொரு புலவனாய் நமக்கு எழுச்சி யூட்டும் மாக்கவி பாரதியார் (பிறப்பு: ஆவணி 28, 1913 / திசம்பர் 11, 1882 – மறைவு: கார்த்திகை 26,1954 / செட்டம்பர் 11,…
மொழித் தொண்டர்கள்: சீத்தலைச் சாத்தனார் – -புலவர்மணி இரா. இளங்குமரன்
இறைவன் அடியார்களுள் வன்தொண்டர் உளர்; மென் தொண்டரும் உளர். வன் தொண்டர் எனப் பெயர் பெற்றார் சுந்தர மூர்த்தி நாயனார். அவர் வன் தொண்டருக்குச் சான்றானார்! மணிவாசகரும் இராமலிங்கரும் மென்தொண்டருக்குச் சான்றாளர்கள். மொழித் தொண்டர்களினும் இவ்வாறு வன் தொண்டரும் உளர்; மென் தொண்டரும் உளர். மொழிப் பிழை செய்தாரைத் தலையில் குட்டிய பிள்ளைப் பாண்டியனும் காதைக் குடைந்து, அறுத்த வில்லியும்வன் தொண்டர்கள். சாத்தனாரோ மென் தொண்டர். மொழிக்குறை செய்தாரின் நிலைக்கு இரங்கி நொந்து தம் தலையில் எழுத்தாணியால் இடித்துக் கொண்டார் அல்லவா! கெய்சர்…