மொழிப்போர் வரலாறு அறிவோம்!-4 : இலக்குவனார் திருவள்ளுவன்
(மொழிப்போர் வரலாறு அறிவோம்!-3 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) தமிழினம் வாழ மொழிப்போர் வரலாறு அறிவோம்! 4 இந்திஎதிர்ப்புப் போராட்டங்கள் அடுத்து இக்கால இந்திஎதிர்ப்புப் போராட்டங்களுக்கு வருவோம். 1930-1940 இல் எழுந்த இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சிகளை ‘முதல் மொழிப்போர்’ என்கின்றனர். பொது மொழி விரும்பிய வடநாட்டுத்தலைவர்கள் இந்தியைப் பரப்பும் பணி 19ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கி விட்டது. 1893இல் ‘நகரி பிரச்சாரனி சபா’ எனக் காசியிலும் 1910 இல் அலகாபாத்தில் ‘இந்தி சாகித்திய சம்மேளன்’ என்றும் அமைப்புகள் தோற்றுவிக்கப்பட்டன. 1905 இல் பனாரசில் தேவநாகரி பரப்புரை அவை…
நான் கண்ட வ. உ. சி. – கி.ஆ.பெ. 1/2
நான் கண்ட வ. உ. சி. 1/2 திருவாளர் வ.உ. சிதம்பரம்(பிள்ளை) அவர்கள் தமிழ் நாட்டுத்தேசபக்தர்களுள் ஒருவர். தேசபக்தர் என்றாலே திரு.பிள்ளை அவர்களைத்தான் குறிக்கும். நாட்டின் மீது அவருக்குள்ள பற்று உள்ளபடியே அளவைக் கடந்தது எனக் கூறலாம். பெரியார் காந்தியடிகளுக்கு முன்பே திரு.பிள்ளை இந்தியாவில் தேசபக்தராக விளங்கியவர். (உ)லோக மான்ய பால கங்காதர திலகர் அவர்களின் அரசியல் மாணவர் ஆவர். காந்தியடிகள் தென் ஆப்பிரிக்காவில் தொண்டு செய்திருந்த காலத்திலேயே திரு.பிள்ளை அவர்கள் இந்தியாவில் தேசத்தொண்டு செய்தவர்கள். பலமுறை சிறை சென்றவர்கள். அவர் செய்த குற்ற…