திலீபனைப் படம் பிடித்த கவி கத்தூரி
நிறுத்திப் படித்த நிகரில்லாக் கவிதை ! அழகென்றால் என்ன ? உடல் அழகு, கல்வியழகு, கவிதையழகு என்று எத்தனையோ விதமாக அழகுகள் பேசப்படுகின்றன. எல்லா அழகுகளுக்கும் மனிதன் தன் வசதிக்கேற்ப வரைவிலக்கணம் வகுத்திருக்கிறான். அழியும் அழகை நம்பி ஆகா இதுவல்லவோ அழகென்று ஓடி ஏமாறுவோர் உலகில் பலர் உண்டு. ஆனால் அழியா அழகென்று ஒன்றிருக்கிறது. அதுதான் மனிதனை என்றும் உற்சாகமாக வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அந்த அழகை அடையாளம் காணும் உணர்வை இறைவன் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒளித்து வைத்திருக்கிறான். மற்றவரின் கருத்துப் பாதிப்பிற்கு…
வேண்டும் பன்னாட்டு நீதிப் பொறிமுறை – த.தே.வி.இ.கருத்தரங்கம்
திலீபன் 28ஆவது நினைவுநாள் கருத்தரங்கம் இருபத்தெட்டு ஆண்டு காலம் முன்பு தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டம் இந்தியத் தலையீட்டால் நெருக்கடிக்கு உள்ளான போது சொட்டு நீரும் அருந்தாத பட்டினிப் போராட்டத்தில் உயிர் தந்து தடை நீக்கிய ஈகச்சுடர் திலீபன் நினைவு நாளில் …. இன்று சிங்கள-அமெரிக்க-இந்தியக் கூட்டுச் சதியால் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் தமிழீழ மக்களின் நீதிப் போராட்டத்தில் அடுத்துச் செய்ய வேண்டியது என்ன? என்ற வினாவிற்கு விடைதேடும் கருத்தரங்கினை தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் சார்பில் நடத்துகின்றோம். திலீபன் நினைவை நெஞ்சில் சுமந்து……
திலீபனின் 28 ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு, பிரித்தானியா
புரட்டாசி 10, 2046 / செப்.. 27, 2015 மாலை 3.00-4.00
பார்த்திபன் இப்போதும் பசியோடுதான் இருக்கிறான்! – ஒருவன்
( ஆவணி 30, 2046 / 15-09-1987 தொடக்கம் புரட்டாசி 10 / 26-09-1987 வரை பன்னிரு நாட்கள் யாழ்ப்பாணம் நல்லூர் முன்றலில் இந்திய அரசை நோக்கி ஐந்து வேண்டுகோள்களுடன் நீர், ஆகாரம் எதுவுமின்றி உண்ணா நோன்பிருந்து மடிந்த ஈகச் செம்மல் திலீபன் (பார்த்திபன்) நினைவாக வடிக்கப்பட்ட கவிதை வரிகள்.) நல்லூர் முன்றலில் எழுந்ததோர் வேள்வித் தீ கருகிப்போனதோர் உன்னத ஈகம்! பசியை வென்ற எங்கள் பாலகனுக்கு… அன்று, பாரதம் செய்ததோர் மகா பாதகம்! ஆறுநாள் நோன்பிற்கே வரமருளும் வேலவன் கூட அவன் கண்மூடும்வரை கண்திறக்கவில்லை…
திலீபன் – உயிர்க்கொடைஞர்களின் குறியீடு.
திலீபனைப் போற்றி விடுதலையை மீட்டெடுப்போம்! காந்தி வழியில் நடந்ததால், காந்தியம் பேசும் இந்தியத்தால் பறிக்கப்பட்டது திலீபனின் உயிர். இந்தியம் என்பது என்றென்றைக்கும் தமிழ்ப்பகையை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளத் தயங்காது என்பதை உறுதிப்படுத்திக் காட்ட விரும்பியதால் திலீபனின் அறப்போர், உயிர்ப் பறிப்பில் முடிந்தது. இராசையா பார்த்தீபன் என்னும் திலீபன், கார்த்திகை 12, 1994 / 27.11.1963 அன்று யாழ்ப்பாணத்திலுள்ள ஊரெழு என்னும் ஊரில் பிறந்து ஊரெழும் வண்ணம் உலகு தொழும் வண்ணம் வீரனாய் மலர்ந்து வீரனாய்ப் புகழுடல் பெற்றார்.ஆவணி 30, 2018 /…
திருக்குறள் திலீபனின் நூறாவது கவனகக் கலை நிகழ்வு
கவனகக் கலையைத் தானும் கற்றுப் பிறருக்கும் கற்பித்து வரும் தமிழ்ஆர்வ இளைஞர் திருக்குறள் திலீபன். இவரது நூறாவது நிகழ்வு காரைக்குடியில் 08.12.13 ஞாயிறு காலை நடத்தப் பெற்றது. தமிழக மக்களின் பழங்கலைகளில், கவனகக் கலை நுண்ணாற்றலை வெளிப்படுத்தும் சிறந்த கலையாகும். ஒரே நேரத்தில் தன்னைச் சுற்றி நடக்கக் கூடிய பல்வேறு நிகழ்வுகளை, நினைவில் நிறுத்தித் தொகுத்து வழங்கல் நினைவாற்றலின் உயர்ந்த நிலையாகும். நினைவாற்றலுடன் படைப்பாற்றலும் இணைந்ததே கவனகக்கலை. திலீபன் காரைக்குடியைச் சேர்ந்த, தங்கசாமி – சுமதி இணையரின் மகனாவார்; சென்னை…