ஆரப்பா, மொகஞ்சதாரோவில் கிடைப்பன தமிழர் அடையாளங்களே!   பழமையான நாகரிகச் சின்னங்கள் கிடைத்த இடங்களில் சிந்துவெளிக்கரையில் அமைந்துள்ள “ஆரப்பா’ “மொகஞ்சதாரோ’ ஆகியன குறிப்பிடத்தக்கன. இங்குக் கிடைத்த பானை ஓடுகள், முத்திரைகள் ஆகியவற்றில் நட்சத்திரக் குறியீடுகளும், கோள்களின் குறியீடுகளும் காணப்படுகின்றன.   தமிழகத்தின் மிகச் சிறந்த துறைமுகமாகப் பண்டைய காலத்தில் திகழ்ந்த கொற்கையை இப்போது ஆராய்ந்த போது இங்குக் கிடைத்த பல பானை ஓடுகளில் நட்சத்திரக் குறியீடுகளைப் போலவே கொற்கையில் கிடைத்த குறியீடுகளிலும் காணப்படுகுன்றன. கார்த்திகை நட்சத்திரத்தைக் குறிக்க ஆறுமீன்கள் குறியீடாகக் காணப்படுகின்றன. செவ்வாய்க் கோளைக்…