தென்னக மக்களிடம் பாகுபாடு காட்டும் மத்திய அரசைக் கண்டிக்கும் தி.மு.க.
திமுக 10- ஆவது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்: சேதுக்கால்வாய் திட்டம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கினை விரைவுபடுத்தி முடித்து, சேதுக்கால்வாய்த் திட்டப்பணிகளை மீண்டும் தொடங்கிட இணக்கமான சூழ்நிலையை உருவாக்கி, தென்னக வளர்ச்சிக்குத் துணை புரிய வேண்டும். கச்சத்தீவு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில், கச்சத்தீவில் தமிழக மீனவர்களுக்கு மீன்பிடி உரிமை இல்லை என்று தமிழக மீனவர்களின் மரபுரிமைக்கு மாறாக மத்திய அரசு எதிர் ஆவணம் கண்டனத்துக்கு உரியது. ஈழத் தமிழர் வருகின்ற மார்ச்சு மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா….