நமக்குத் தேவை மனிதநேயக்கல்வியே! – இலக்குவனார் திருவள்ளுவன்
நமக்குத் தேவை மனிதநேயக்கல்வியே! சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்ப தறிவு. (திருவள்ளுவர், திருக்குறள் 422) மனம்போன போக்கில் செல்லாமல் நன்மை தீமைகளை ஆராய்ந்து தீயனவற்றை விலக்கி, நல்லனவற்றின்பால் கருத்து செலுத்தச் செய்வதே அறிவு என்கிறார் திருவள்ளுவர். பழியும் பாவமும் பொருள்கேடும் வராமல் நன்மைப்பக்கம் செலுத்துவதே அறிவு என மணக்குடவர் விளக்குகிறார். எனவேதான், மனம்போன போக்கெல்லாம் போக வேண்டா (உலகநாதர் : உலகநீதி 3.1) என்று உலகநாதர் கூறியுள்ளார். இத்தகைய அறிவை நமக்குத் தருவதுதான் கல்வி. “கற்றது கைம்மண்…
வேட்டி தீண்டாமை ஒழியட்டும்! தேசிய இனங்களின் உரிமைகள் வெல்லட்டும்!
– இலக்குவனார் திருவள்ளுவன் அண்மையில்(ஆனி 27, 2045 / சூலை 11, 2014 வெள்ளிக்கிழமை) இந்திய மட்டைப்பந்தாட்ட மன்றத்தின் சென்னை அமைப்பில் புத்தக வெளியீட்டுவிழா ஒன்றிற்கு அழைக்கப்பட்டு அழைப்பிதழுடன் அலுவலக ஊர்தியில் சென்றிருந்த நீதிபதி அரிபரந்தாமன், மூத்த வழக்குரைஞர் காந்தி, மதுரை வழக்குரைஞர் சுவாமிநாதன் ஆகியோர் வேட்டி அணிந்து சென்றதால் மன்றத்தில் நுழைந்து விழாவில் பங்கேற்க மறுக்கப்பட்டனர். தமிழ்ப்பண்பாட்டிற்கு எதிரான செயல்பாடு என அனைத்துத் தரப்பாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இச் செயல் கண்டிக்கப்படுவதுடன் இத்தகைய மோசமான போக்கு நிறுத்தப்பட…