தோழர் தியாகு எழுதுகிறார் 201 : சாத்தான்குளம் பென்னிக்குசு செயராசு
(தோழர் தியாகு எழுதுகிறார் 200 : மோதி வாயில் கொழுக்கட்டை!-தொடர்ச்சி) சாத்தான்குளம் பென்னிக்குசு செயராசு 22/06/2023 அன்று சாத்தான்குளம் பென்னிக்குசு செயராசு மூன்றாம் ஆண்டு நினைவுநாள். ஏற்கெனவே உங்களுக்குச் சொன்ன படி, பென்னிக்குசு செயராசு குடும்பத்தினர் நான் அந்த நாளில் சாத்தான்குளத்தில் தங்களோடு இருக்க வேண்டும் என்று விரும்புவதாகச் சில நாள் முன்பு என்றி திபேன் வாயிலாக அறிந்தேன். செயராசின் மருமகன் அகட்டினும் இதை உறுதி செய்த போது, எப்படியும் போய் விடுவது என்று முடிவெடுத்தேன். அதே ஊரைச் சேர்ந்த நண்பர் இசக்கிமுத்து அழைத்து…