உலகத் தமிழர்கள் பங்கேற்கும் உலக அருவினை(சாதனை) நிகழ்வு, துபாய்

உலகத் தமிழர்கள் பங்கேற்கும் உலக அருவினை(சாதனை) நிகழ்வு, துபாய் அன்பான உலகத் தமிழ் மக்களுக்கு, கல்லிடைக்குறிச்சி தேசியக் கல்வி அறக்கட்டளையின் அருவினை(சாதனை) நிகழ்வாக, வருகின்ற 2051 ஐப்பசி 28/2020 நவம்பர் 13 ஆம் நாள் துபாய் நேரம் பகல்  2 மணி, (இந்திய நேரம் பகல் 3.30)  முதல் நவம்பர் 14 ஆம் நாள் பகல் 2 மணி  (இந்திய நேரம் பகல் 3.30)  மகுடை(கொரோனா) விழிப்புணர்வுக்காக உலகத் தமிழர்கள் பங்கேற்கும் உலக அருவினை(சாதனை) நிகழ்வு நடைபெறவிருக்கிறது. தொடர்ச்சியாக 24 மணி நேரம்,24 நாடுகளிலிருந்து…

உலகத் தமிழ்ச் சங்கம், இணையத் தமிழ்க்கூடல் (18.09.2020): அமீரகத் தமிழர்கள்

புரட்டாசி 02, 2051 / 18.09.2020 வெள்ளிக்கிழமை மாலை இ.நே. 4.00   உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, இணையத் தமிழ்க்கூடல் கூடலுரை : முனைவர் ஆ.முகம்மது முகைதீன், துபாய் : அமீரகத் தமிழர்கள் தலைமை : முனைவர் ப.அன்புச்செழியன் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சு.சோமசுந்தர்  பதிவுப்படிவம் https://tinyurl.com/y2a8p3ox இணைப்பு https://tinyurl.com/yxm3hu8w

துபாயில் உணவின்றித் தவித்து வரும் தமிழகத் தொழிலாளர்கள்

துபாயில் உணவின்றித் தவித்து வரும் தமிழகத் தொழிலாளர்கள்  ஏறத்தாழ நூறாயிரம் உரூபாய் வரை பணத்தை முகவர்களிடம் செலுத்தி துபாயில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு வேலைக்குப் பின்வருவோர் வந்தனர். மாரிமுத்து த/பெ காத்தமுத்து – பட்டுக்கோட்டை அருகில் உள்ள புதுப்பட்டிணம் ஆதம் பாவா த/பெ கிருது ஒலி – திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சுரண்டை இருவரும் தாங்கள் பார்த்து வந்த நிறுவனத்தில் சம்பளம் சரிவர வழங்காததால் அந்த நிறுவனத்தை விட்டு வெளியில் வந்து விட்டனர். தற்போது தங்க இடமும், உணவும் இல்லாமல்  அல்லல்பட்டு வருகின்றனர்.  இதனால்…

மாணாக்கர் நுழைவுத் தேர்விற்கான சிறப்புக்கருத்தரங்கம், துபாய்

கார்த்திகை 22, 2048  வெள்ளிக்கிழமை  08.12.2017 மாலை 5 மணி நோவோடெல் உறைவகம்   துபாயில் மாணவ, மாணவியர் நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற உதவும் சிறப்புக் கருத்தரங்கம்   இந்த கருத்தரங்கில் பங்கேற்க விரும்புபவர்கள் 04 397 7777 / 058 8 488127 / 0588 488 128 / 0588 488 129 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் cc.resonance@stree.ae என்ற மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ளலாம். 5-ஆம் வகுப்பு முதல் படித்து வரும்…

துபாயில் பேச்சாளர் பயிற்சி முகாம்

துபாயில் பேச்சாளர் பயிற்சி முகாம்   துபாய் ஈமான்  பண்பாட்டு மையத்தின் சார்பில் பேச்சாளர் பயிற்சி முகாம் புரட்டாசி 19, 2048 / 05.10.2017 வியாழக்கிழமை மாலை 7 மணிக்கு மக்குதூம் பாலம் அருகில் உள்ள அரேபியா  ஓல்டிங்குசு தலைமையகத்தில் (சலாமியா  கோபுரம்)  நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பயிற்சியாளர் குணா கலந்து கொண்டு பயிற்சியை வழங்க இருக்கிறார்.    பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் 050 51 96 433 / 055 800 7909 / 052 777 8341 ஆகிய…

துபாயில் சோபியாவின் கனலி நூல் வெளியீட்டு விழா

துபாயில்  சோபியாவின் கனலி நூல் வெளியீட்டு விழா துபாய் : துபாயில் பணிபுரிந்து வரும் திருமதி.  சோபியாவின் கவிதை நூல் தொகுப்பு ‘ கனலி’ ஆனி 15, 2048 /  29.06.2017 வியாழக்கிழமை மாலை துபாய் வசந்த பவன் உணவகத்தில் வெளியிடப்பட்டது. ஓசூரைச் சேர்ந்த இவர்  சார்சாவில் தமிழ்  ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். துபாய் அல்நாதா வசந்தபவனில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக காப்பியக்கோ.திரு சின்னா சர்ப்புதீன் கலந்து கொண்டார். அபுதாபியைச் சேர்ந்த எழுத்தாளர்  (இ)யூசுப்பு தலைமையேற்றார். திருமதி. செசிலாபானு, ஆசிப் மீரான் ,…

ஊன்விற்று வாழ்வதும்தான் வாழ்வோ? – கு. நா. கவின்முருகு

ஊன்விற்று வாழ்வதும்தான் வாழ்வோ? பிணந்தின்னிக் கூட்டமடா இந்தக் கூட்டம் பிழைப்பிற்கு மானமின்றி விழுவர் காலில்! பணத்தையெண்ணிச் சுரண்டித்தான் மானம் கெட்டார் பாமரரின் உயிர்குடித்தும் லாபம் காண்டார்! குணமிழந்தே நாய்களைப்போல் அலைந்து சுற்றி குலம்செழிக்க குடிகெடுக்க தலைவர் ஆனார் மணந்துகொண்ட இல்லாளோ இணங்கா விட்டால் மக்களுக்கு நல்லவை செய்து வாழ்வார்! பிச்சைக்கே வாக்குவாங்கி கோட்டை போக பாட்டாளி வயிற்றுக்கோ செய்த தென்ன? இச்சைக்காம் நாற்காலி சண்டை, போட்டி இடுப்பிலுள்ள வேட்டிக்கோ கறைகள் உண்டு! எச்சையிலை நாய்களிடம் பட்ட பாடாய் எங்களுக்குத் திண்டாட்டம் விடிய லில்லை! சச்சுவுக்கு…

தொடக்கப்பள்ளி மாணாக்கர்களுக்கான பேச்சுப்போட்டி, துபாய்

   துபாயில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான + அனைத்துலகப் பேச்சுப் போட்டி 2016 தொடக்கப் பள்ளி மாணவர்களின் நாவன்மைக்கு நல்லதொரு களமாக மலர்ந்து வரும் ‘மாணவர் முழக்கம்’ எனும் அனைத்துலகத் தமிழ்ப் பேச்சுப் போட்டியின் மாபெரும் இறுதிச்சுற்று இம்முறை எழில்மிகு துபாயில் இடம் பெறுகிறது. மலேசியாவின் ஆத்திரோ தொலைக்காட்சியும் ‘வணக்கம் மலேசியா’ இணையச் செய்தித் தளமும் இணைந்து, தமிழகம் வேலம்மாள்  உலகப்பள்ளி நிறுவனத்தாரின் ஆதரவுடன் நடத்துகின்றன. எதிர்வரும்  கார்த்திகை18, 2047 / திசம்பர் 3ஆம் தேதி சனிக்கிழமை துபாயின் அல் சபாவில்  சே.எசு.எசு. (JSS Private…

துபாயில் நடைபெற்ற நடன அரங்கேற்ற நிகழ்ச்சி

துபாயில் நடைபெற்ற செல்வி சிரத்தாவின் நடன அரங்கேற்ற நிகழ்ச்சி    துபாய் : ஐப்பசி 26, 2047 / நவம்பர் 11, 2016 வெள்ளிக்கிழமை அன்று செல்வி சிரத்தா  சிரீராம(ஐய)ரின்  பரதநாட்டியம்  அரங்கேற்றம் மரு. இராசசிரீ(வாரியர்) தலைமையில் வெல்லிங்டன் அரங்கத்தில் வெகுசிறப்பாக  நடைபெற்றது.   குரு திருமதி மதுராமீனாட்சி சினீவாசு பாட்டும், நட்டுவாங்கமும் திரு  சிரீனி கண்ணூர் மிருதங்கம் , திரு சுரேசு நம்பூதிரிவில்யாழ்(வயலின்) , திரு பிரியேசு  புல்லாங்குழல் அனைத்தும் வெகு இனிமையாக  இருந்தன.  மலர் வணக்கம், அலாரிப்பில்  தொடங்கிக் கௌத்துவம், வண்ணம், பதம்,…

துபாயில் சிறுநீரகப்பாதிப்புற்ற தமிழ்ச்சிறுவனுக்கு மருத்துவப் பொருளுதவி தேவை!

துபாய்  மருத்துவமனையில் சிறுநீரகப் பாதிப்பினால்  மருத்துவம் பெற்று வரும் தமிழகச் சிறுவன் சிகிச்சைக்கான கட்டணம் செலுத்த முடியாமல் வேலையில்லாமல் தவித்து வரும் தந்தை, உதவிட வேண்டுகோள்   துபாய் :   துபாய்  மருத்துவமனையில் சிறுநீரகப் பாதிப்பினால் தமிழகச் சிறுவன்  (இ)ரீகன் பெய்த்து பால் (அகவை 7)  பண்டுவம்பெற்று வருகிறார். இவரது  மருத்துவக் கட்டணததைச் செலுத்த முடியாமல் வேலையில்லாமல் இருந்து வரும் அவரது தந்தை தவித்து வருகிறார். நல்ல மனம் கொண்டவர்கள் இந்த மருத்துவத்திற்காக உதவிடவேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.   துபாயில் உள்ள நிறுவனம் ஒன்றில்…

இதழ்களின் மேல் கருவண்டு – அபிநயா, துபாய்

இதழ்களின் மேல் கருவண்டு வீட்டினுள் விழுந்தன வளர்பிறை வெண்மதிகள் வெட்டிய நகங்கள்’. பூச்சிக்கொல்லி மருந்தையும் குடிப்போம் அயல்நாட்டுப்பானம்! கோயிலுக்குக் குந்தகமென்றால் கருவறையும் அகற்றலாம் கருப்பை! இறைவனும் இறைவியும் இணக்கத்துடன் இணைந்தார்கள் அரவாணிகள்! நாத்திகனுக்குக் கோவிலிலென்ன வேலை? அன்னதானம்! இதழ்களின் மேல் கருவண்டு மச்சம்! அறைந்தாள் முத்தம் கொடுத்தான் அப்பா! இயற்கையும் உறைகூழ் கொடுத்தது நுங்கு! கூட்டமாய் வந்து உள்ளாடை திருடினார்கள் மணல் கொள்ளை! – அபிநயா, துபாய். தரவு : முதுவை இதயத்து

துபாய் (இ)ரேஃகா இசை-நடனப் பயிற்சிப் பள்ளியில் , கோடைக் காலச் சிறப்புப் பயிற்சி முகாம்

துபாய் :  துபாய்   (இ)ரேஃகா இசை-நடனப் பயிற்சிப் பள்ளியில் , கோடைக் காலச் சிறப்புப் பயிற்சி முகாம் நடாத்தப்பட்டது.   அதில் கலந்து கொண்ட மாணவ,மாணவிகளின் இசை நடன நிகழ்ச்சி கடந்த 2 ஆம்  நாள் கல்ஃப்   முன்முறைப் பள்ளியில் நடை பெற்றது. ,,சிறுவர் சிறுமிகள் ஆடல் பாடலுடன் இசைக்கருவிகளையும் வாசித்து வந்திருந்தவர்களை மகிழ்ச்சிப்படுத்தினார்கள். மேலும் இங்கு தொடர்ச்சியாகப் பயிலும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்களில் சில பதிவிசை(கரோக்கி)யுடன் இணைந்து பாடல்களைப் பாடி பார்வையாளர்களை மகிழ்வித்தார்கள். மேலும் இந்தப் பள்ளியின் நடன ஆசிரியர்கள்  ஐதர்,  மற்றும் …