34 : துயின்மை-hibernation இன்றுயி லிரியும் பொன்றுஞ்சு வியனகர்க் (பெரும்பாணாற்றுப்படை : 440) இன்றுயில் வதியுநற் காணா டுயருழந்து (முல்லைப் பாட்டு : 80) கம்புட் சேவல் இன்றுயில் இரிய (மதுரைக்காஞ்சி : 254) வேய்புரை மென்றோ ளின்றுயி லென்றும் (குறிஞ்சிப்பாட்டு: 242) ஓங்கல்அம் சினைத் தூங்கு துயில் பொழுதின் (நற்றிணை : 87.2) இவைபோல் சங்க இலக்கியங்களில் 62 இடங்களில் துயில் என்னும் சொல்லும் 31 இடங்களில் துயில் என்பதன் அடிப்படையிலான சொல்லும் பயின்றுள்ளன. அவற்றுள் ஒன்று துயின்று என வரும் பின்வரும்…