ஈழத்தாயே பொறுத்திடு! – துயிலகா

  ஈழத்தாயே பொறுத்திடு, தாயகம் மீட்டெடுப்போம் சற்றே பொறுத்திடு! தமிழரை ஒழிக்கும் சிங்களத்தின் செய்கை, நீண்டகாலம் நீடிக்காது, நிலைத்து நிற்போம் தமிழர் நாம்! முள்ளிவாய்க்கால் முடிந்ததாம், போர் தீர்ந்ததாம், இலங்கை வென்றதாம், தமிழர்க்கு விடுதலையாம், ஆயினும் எம்வாழ்வில் தேற்றமில்லை, சுதந்திரமாய் வாழ இங்கு வழியும் இல்லை! சிங்களத்தின் குடிகள் சொகுசாய் எம் வீட்டினுள், நாங்களோ வாழ வழியின்றி வீதியில்! எம்பெண்களை வற்புறுத்தி இராணுவத்தில் வேலை, தாயாவதைக்கூட தடுக்கும் ஈரமற்ற இன ஒடுக்கம்! ஐக்கிய நாடுகளோ அமெரிக்காவின் நட்பில், அமெரிக்காவின் பார்வையிலோ இலங்கையில் சமாதானம்! கேட்பார்…

தமிழர் நாம்! – துயிலகா

விளைந்த வயல்களில் வேர்களும் இல்லை வியர்வை சிந்தி உழைத்தவர் தடயமும் இல்லை மழைத்தூறல் பட்டால் மனம்கூட நிறைத்திடும் மண்வாசம் கொஞ்சமதைத் தோண்டினாலும் சற்றே பிணங்களின் படையெடுப்பு வீதிவழி கெந்தியாடிய சின்னஞ்சிறார் கையில்லை காலில்லை ஊனமானார் பட்டுச்சரிகையில் சொலித்த எம் ஈழத்தாய் விதைவைக்கோலம் தரித்தின்று மௌனித்தாள் காலகாலம் ஆண்டுவந்த எங்கள் பூமி போர்க்களமாய் மாறி நிலைகுலைந்ததின்று தமிழர் என்ற கோர்வைக்குள் நாமின்று தனித்தனியே செல்வதால்தான் பயனுமென்ன? ஒவ்வொரு தமிழனும் ஒவ்வொரு வேங்கை ஒன்றுதிரண்டால் போதும் காரிருளும் கலைந்தோடும்! ஒருவழி தமிழ்வழி நின்றிருந்தால் போதும் ஓடி ஒழிய…