இந்திய அரசு இலங்கைக்குக் கூலிப்படையா? – வைகோ கண்டனம்
இந்திய அரசு இலங்கைக்குக் கூலிப்படையா? வராகா கப்பலை இலங்கைக்கு வழங்கிய இந்தியாவின் இரண்டகம் வைகோ கண்டனம் இந்த ஆவணி 10 /ஆகத்து 27 ஆம் நாளன்று அன்று இலங்கையின் தலைநகரமாம் கொழும்பு நகர் துறைமுகத்தில் ‘வராஃகா’ கப்பலை இலங்கைக்குத் தாரை வார்த்த இந்திய அரசின் செயல் ஈழத்தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் இந்தியா செய்த மன்னிக்கவே முடியாத பச்சை இரண்டகம் (துரோகம்) ஆகும். ஈழத்தமிழர்களைக் காத்து விடுதலைத் தமிழ் ஈழத்தை வென்றெடுக்க மகத்தான ஈகத்தாலும், தீரத்தாலும் களமாடிய தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை…
தமிழ்மொழிக்கு வஞ்சகம் செய்யாத வரையில் தன்னிலையில் உயர்வர் ! – கருவூறார்
தமிழ்மொழிக்கு வஞ்சகம் செய்யாத வரையில் தன்னிலையில் உயர்வர் ! எவனொருவன் தமிழ் மொழியைத் திருத்தமாகவும், அழகாகவும், இனிமையாகவும் பேசுகிறானோ, அவனே உன்மையான இறைமைப் பணி புரிபவனாவான். எவனொருவன், பிறரைத் திருத்தமாகவும், அழகாகவும், இனிமையாகவும் பேசுவதில் ஆர்வமும் ஆற்றலும் பெற்றிடுமாறு செய்கின்றானோ, அவனே, சிறந்த பூசைகளைச் செய்கிறவனாவான். எவனொருவன் நற்றமிழ் இலக்கியங்களைப் பிறர் நனி விரும்பிக் கேட்குமளவு எடுத்துச் சொல்லுகின்றானோ, அவனே நல்ல தவத்தைச் செய்கிறவனாவான். எவனொருவன் நற்றமிழால் நாடியனைத்தையும் பெறலாம்; தேடுவதனைத்தையும் பெறலாம்….. என்பதைச் செயலால் மெய்ப்படுத்திக் காட்டி வாழுகின்றானோ, அவனே பிறர் தொழத்தகும்…