ஊரும் பேரும் 42 : இரா.பி.சேது(ப்பிள்ளை): துறையும் நெறியும் தொடர்ச்சி
(ஊரும் பேரும் 41 : இரா.பி.சேது(ப்பிள்ளை): துறையும் நெறியும் தொடர்ச்சி) ஊரும் பேரும் 42 : இரா.பி.சேது(ப்பிள்ளை): துறையும் நெறியும் தொடர்ச்சி கடம்பந்துறை சைவ உலகத்தில் ஆன்ற பெருமை யுடையது ஆவடுதுறை. தேவாரப் பாமாலை பெற்றதோடு திருமந்திரம் திருஆவடுதுறை அருளிய திருமூலர் வாழ்ந்ததும் அப்பதியே இன்னும், திருவிசைப்பா பாடிய திருமாளிகைத் தேவர் சிவகதியடைந்ததும் அப்பதியே. இத்தகைய ஆவடு துறை, பேராவூர் நாட்டைச் சேர்ந்தது என்று சாசனம் கூறுகின்றது. பசுவளம் பெற்ற நாட்டில் விளங்கிய அப்பதியினை “ஆவின் அருங் கன்றுறையும் ஆவடுதண்துறை” என்று போற்றினாா் சேக்கிழாா்….
ஊரும் பேரும் 41 : இரா.பி.சேது(ப்பிள்ளை): துறையும் நெறியும்
(ஊரும் பேரும் 40 : இரா.பி.சேது(ப்பிள்ளை): ஆறும் குளமும் தொடர்ச்சி) ஊரும் பேரும் 41 : இரா.பி.சேது(ப்பிள்ளை): துறையும் நெறியும் இறைவன் உறையும் துறைகள் பலவும் ஒரு திருப்பாட்டிலே தொகுக்கப் பெற்றுள்ளன. “கயிலாய மலையெடுத்தான் கரங்களோடுசிரங்கள் உரம் நெரியக்கால் விரலாற் செற்றோன்பயில்வாய் பராய்த்துறைதென் பாலைத்துறைபண்டெழுவர் தவத்துறை வெண்துறை”. என்று பாடினார் திருநாவுக்கரசர். திருப்பராய்த்துறை காவிரியாற்றினால் அமைந்த அழகிய துறைகளுள் ஒன்று திருப்பராய்த்துறை. அது பராய்மரச் சோலையின் இடையிலே அமைந்திருந்தமையால் அப் பெயர் பெற்றது போலும்: காவிரிக்கரையில் கண்ணுக்கினிய காட்சியளித்த பராய்த் துறையிற் கோயில் கொண்ட…