இந்தியத் தூதரகம் கைவிரித்ததால் சிங்கப்பூரிலிருந்து வெளியேற்றப்பட்டோம்
இந்தியத் தூதரக அதிகாரிகள் உதவி செய்யாததால், வெளியேற்றப்பட்டதாகச் சிங்கப்பூரிலிருந்து சொந்த ஊர் திரும்பிய ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் 21.12.13 சனிக்கிழமை யன்று தெரிவித்தார். சிங்கப்பூரில் சிற்றிந்தியா பகுதியில் 08.12.13 அன்று நேரிட்ட சாலைநேர்ச்சியில், புதுக்கோட்டை மாவட்டம் ஓணாங்குடியைச் சேர்ந்த ச. குமாரவேல் உயிரிழந்தார். அதையடுத்து அந்தப் பகுதியில் கலவரம் ஏற்பட்டது. இதில் தொடர்புடையதாக கூறப்படும் ஏறத்தாழ 30 பேர் காவல்துறையினரால் தளையிடப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள். அதைத் தொடர்ந்து 53 இந்தியர்களைக் கலவரத்தில் தொடர்புடையதாகக் கருதி சிங்கப்பூர் அரசு அந்நாட்டிலிருந்து வெளியேற்றியுள்ளது….