தேவதானப்பட்டிப் பகுதியில் மீண்டும் கருகும் தென்னை மரங்கள்  தேவதானப்பட்டிப் பகுதியில் மீண்டும் தென்னை மரங்கள் கருகுவதால் உழவர்கள் வேதனை அடைகின்றனர்.  தேவதானப்பட்டி அருகே உள்ள புல்லக்காபட்டி, செங்குளத்துப்பட்டி, மஞ்சளாறு அணை, சில்வார்பட்டி, குள்ளப்புரம், கெங்குவார்பட்டி   முதலான பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளாகப் போதிய மழையின்மையால் அரசின் புள்ளிவிவரப்படி ஏறத்தாழ 2 இலட்சத்திற்கும் அதிகமான தென்னை மரங்கள் கருகின. இதனால் உழவர்கள் தென்னை மரத்தை வெட்டி விட்டு அதனை வீட்டடி மனைகளாக மாற்றிவிட்டனர்.  கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெய்த மழையால் ஆறு, ஏரிகள், கிணறுகள்…