திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 047. தெரிந்து செயல் வகை
(அதிகாரம் 046. சிற்றினம் சேராமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 047. தெரிந்து செயல் வகை நன்மை, தீமை போன்றவற்றை நன்குஆய்ந்து செய்யும் செய்முறைகள். அழிவதூஉம், ஆவதூஉம் ஆகி, வழிபயக்கும் ஊதியமும், சூழ்ந்து செயல். ஆவது, அழிவது, பின்விளைவது போன்றவற்றை ஆய்ந்து செய்க. தெரிந்த இனத்தோடு, தேர்ந்(து)எண்ணிச் செய்வார்க்(கு), அரும்பொருள் யா(து)ஒன்றும், இல். செயல்முறைகளைத் தேர்ந்தாரோடு கலந்து செய்வார்க்கு முடியாச்செயல் இல்லை. ஆக்கம்…