(அதிகாரம் 050. இடன் அறிதல் தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 051. தெரிந்து தெளிதல் எப்பணிக்கும், தக்காரை ஆராய்ந்து,  தெளிந்து, பணியில் அமர்த்தல்   அறம்,பொருள், இன்பம், உயிர்அச்சம், நான்கின்,       திறம்தெரிந்து, தேறப் படும்.      அறமும், பொருளும், இன்பமும்,  உயிர்அச்சமும், ஆராய்ந்து தேர்க.   குடிப்பிறந்து, குற்றத்தின் நீங்கி, வடுப்பரியும்,       நாண்உடையான் கட்டே, தெளிவு.         நற்குடிமை, குற்றம்இன்மை, பழிக்கு       வெட்குதல் பெற்றாரைத், தெளிக.   அரியகற்(று), ஆ(சு)அற்றார் கண்ணும், தெரியும்கால்,      …