4. குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 5/5 – சி.பா.
(குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 4/5 தொடர்ச்சி) 4. குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 5/5 கால நதியின் கதியதினில்கடவுள் ஆணை காண்பீரேல்ஞால மீது சுகமெல்லாம்நாளும் அடைந்து வாழ்வீரே! என்றும் தெய்வ நம்பிக்கையை, கடவுள் ஆணையை வற்புறுத்துகின்றார். ‘தைப்பொங்கல்’ என்ற கவிதையில், பொங்கல் பொங்கி முடிந்த பிறகு கடவுளுக்கு, முதலிலும் காகத்துக்கு அடுத்தும், பின்னர் உடன் இருந்தோர்க்கும் வழங்கி ஒக்க உண்டு மகிழும் பாங்கினையும் எடுத்து மொழிகின்றார். கவிமணி காட்டும் உவமை நலமும் நகைச்சுவைத் திறனும் கவிமணி கையாளும் உவமைகள் எளியன; இனியன. ‘பூமகளின்…
4. குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 4/5 – சி.பா.
(குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 3/5 தொடர்ச்சி) குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 4/5 அம்புயம் வாடித் தளர்ந்ததம்மா!-அயல்ஆம்பலும் கண்டு களிக்குதம்மா!இம்பருலகின் இயல்பிதம்மா!-மதிக்குஇன்னார் இனியாரும் உண்டோ அம்மா? மாற்றம் உலகின் இயற்கையென–இங்குமாந்தரும் கண்டு தெளிந்திடவோ,போற்றும் இறைவன் இம் மாமதியம்–விண்ணில்பூத்து கிலவ விதித்தனனே! என்ற பாடல்களில் சிறந்த கருத்தும், கூனக் கிழவி நிலவினிலே–ராட்டில்கொட்டை நூற்கும்பணி செய்வதை இம்மாநிலம் கண்டு மகிழ்ந்திடவே–காந்திமாமதி யோங்கி வளருதம்மா! என்ற பாடலில் காந்தியமும் அமைந்து துலங்குவதைக் காணலாம். காட்சி இன்பம் ஒர் ஏழைப்பெண் தன் தாயிடம் கடிகாரம் வாங்கித் தரும்படி கேட்கிறாள்….
4. குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 3/5 – சி.பா.
(குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 2/5 தொடர்ச்சி) குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 3/5 குழந்தைத் தோழர்கள் குழந்தைகளுக்குக் காக்கையும், கோழியும், நாயும். கிளியும், பசுவும், கன்றும் இனிய தோழர்கள் ஆவர். எனவே கவிமணியின் பாட்டு இத்துறைகளில் அமைந்திருப்பதில் வியப்பில்லை. எளிய பாடல்களில் கற்பனை நயத்தினைக் குழைத்துக் குழந்தையின் உள்ளத்தில் அறிவு வேட்கையினைக் கவிமணி அவர்கள் உண்டாக்குகின்றார். சேவற் கோழியைப் பற்றிப் பாடும்போது, குத்திச் சண்டை செய்யவோ?குப்பை கிண்டி மேயவோ?கத்திபோல் உன் கால் விரல்கடவுள் தந்து விட்டனர்! காலை கூவி எங்களைக்கட்டில் விட்டெ ழுப்புவாய்,வேலை…
4. குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 2/5 – சி.பா.
(குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 1/5 தொடர்ச்சி) 4. குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 2/5 தம்முடைய இருபத்தைந்தாம் வயது தொடங்கிய-அதாவது 1901ஆம் ஆண்டு முதல்-தம்முடைய திருமண ஆண்டு முதல் குழந்தைப் பாடல்கள் எழுதத் தொடங்கிவிட்டார். 1917-18ஆம் ஆண்டில் “மருமக்கள் வழி மான்மியம்” என்னும் கவிதை ‘தமிழன்’ என்ற பத்திரிகையில் தொடர்ச்சியாக வெளிவந்தது. இவர்தம் குழந்தைப் பாடல்கள் 1941ஆம் ஆண்டில் ‘இளந்தென்றல்’ என்ற பெயரில் வெளிவந்தது. ‘மலரும் மாலையும்’ என்னும் கவிதைத் தொகுதியை, மழலை மொழி, இயற்கை இன்பம், காட்சி இன்பம், கதைப் பாட்டு, உள்ளமும் உணர்வும் என்னும் ஐந்து…
4. குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 1/5
(தனித்தமிழ் இயக்கங் கண்ட அடிகளார் 3/3 – சி. பா. தொடர்ச்சி) 4. குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 1/5 மனிதன் வாழ்க்கையில் பெறும் பேறுகள் பல நல்ல மனைவி வாய்ப்பதும், பண்பு சான்ற குழந்தைகள் வாய்ப்பதும் ஒருவனுக்கு வாய்க்கும் பேறுகளுள் சிறப்பானவைகளாகும். பெறும் பேறுகளுள் சிறந்த பேறு நல்ல மக்கள் வாய்ப்பதேயாகும் என்பதனைத் திருவள்ளுவர், “பெறுமவற்றுள் யாமவறிவ தில்லை அறிவறிந்தமக்கட்பேறு அல்ல பிற” (குறள். 70) என்று குறிப்பிட்டுள்ளார். பொருட்செல்வம், செவிச் செல்வம், கல்விச்செல்வம் முதலான செல்வங்களிலும் குழந்தைச் செல்வமே சிறப்பு வாய்ந்ததாகும்….