தமிழ்த் தென்றல் – கி.ஆ.பெ. 1/2
தமிழ்த் தென்றல் தமிழ்த் தென்றல் திரு. வி. க. அவர்கள் தமிழ்த். தொண்டு, தொழில் தொண்டு, சமயத்தொண்டு, அரசியல் தொண்டு, சமூகத் தொண்டு ஆகிய ஐவகைத் தொண்டும் தன்னலங் கருதாது செய்து வந்த தமிழகத்தின் தனிப் பெருந்தலைவர். பிற்காலத்தில் இத்தனையிலிருந்தும் ஒய்வு எடுத்துக் கொண்டு, இராயப்பேட்டையிலுள்ள அச்சகத்தில் தன் தமையனார் உலகநாத(முதலியா)ர் அவர்களுடன் இருந்து, எழுத்துப்பணி புரிந்தபொழுது நான் அடிக்கடி அவர்களைச் சந்தித்துப் பேசி மகிழ்வதுண்டு. மாறுபட்ட கட்சியினரிடத்தும், மாறுபட்ட கொள் கையுடையவர்களிடத்தும் சிறிதும் வெறுப்படையாமல் மனம் திறந்து பேசி மகிழ்ச்சியடையும் பெருங்குணத்தை, அவரிடம்…