தேர்தல் ஆணையத்தின் கொடுங்கோன்மை!- இலக்குவனார் திருவள்ளுவன்
தேர்தல் ஆணையத்தின் கொடுங்கோன்மை! தேர்தல் ஆணையத்தின் அறமுறையற்ற செயல்பாடுகளைக் கொடுங்கோலாட்சியின் செயல்பாடுகளுடன்தான் ஒப்பிட முடியும். மக்களாட்சியின் அடையாளமாகத் திகழ்வது தேர்தல். தேர்தலில் போட்டியிடுவோருக்குரிய மக்களாட்சிக் கடமைகளை ஆற்ற உதவ வேண்டியது தேர்தல் ஆணையத்தின் அடிப்படைப் பணி. ஆனால் கட்சிகளுக்கேற்றவாறு மாறுபட்ட அளவுகோல்களைக் கொண்டு சூழ்நிலைகளை ஆராய்ந்து தனக்குரிய கடமையிலிருந்து தவறுவதே தேர்தல் ஆணையத்தின் பணியாக உள்ளது. நடுநிலையாளர் என்ன சொல்லுவார்கள் என்ற அச்சம் இன்றித் துணிந்து தவறுகளைச் செய்கிறார்கள் என்றால் இதனை எங்ஙனம் செங்கோன்மையாகக் கூற முடியும்? ஆளுங்கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளுக்கு ஓர்…