தேர்தல் ஆணையத்தின் வன்முறை : இன்றைக்குப் பலி அதிமுக! நாளைய பலி திமுக? – இலக்குவனார் திருவள்ளுவன்
தேர்தல் ஆணையத்தின் வன்முறை : இன்றைக்குப் பலி அதிமுக! நாளைய பலி திமுக? ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை. (திருவள்ளுவர், திருக்குறள் 541) வழக்காயினும், சிக்கலாயினும் வேறு தீர்விற்கு உரியதாயினும் வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடு பாராதே! எப்பக்கமும் சாயாமல் நடுவுநிலையோடு அணுகுக! வழங்கவேண்டிய தீர்ப்பை ஆராய்க! அதனைச் செயல்படுத்துக! அதுவே உண்மையான நீதியாகும் எனத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் கூறுகிறார். சட்டத்தின் முன் யாவரும் சமம் என்பது நமது நாட்டில் சொல்லப்பட்டாலும் நடைமுறையில் சாதிக்கேற்ற நீதி! இருப்பவனுக்கு ஒரு…