இலக்குவனார் பிறந்த நாளில் அயல்மொழித் திணிப்புகளை அகற்ற உறுதி் கொள்வோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்
இலக்குவனார் பிறந்த நாளில் அயல்மொழித் திணிப்புகளை அகற்ற உறுதி் கொள்வோம்! கார்த்திகை 1 அல்லது நவம்பர் 17 தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் பிறந்த நாள். இவ்வாண்டு அவரின் நூற்றுஏழாம் பிறந்த நாள். தமிழ்நலப் போராளியாக எண்ணத்தாலும் சொல்லாலும் செயலாலும் வாழ்ந்தவர் பேரா.சி.இலக்குவனார். அவர் அறிவுரைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே எழுத்து என்பதற்கு எதிரான போர்க்குரலாகும். ஏதோ, இராசுட்டிரிய சேவா சங்கத்தின் அச்சுப்பதிப்பான பா.ச.க. அரசுதான் இவ்வாறு மொழித்திணிப்பில் ஈடுபடுவதாக இன்றைய தலைமுறையினர் எண்ணக்கூடாது. காங்கிரசு எனப்படும் பேராயக்கட்சியின் தலையாய…