ஊரும் பேரும் 51 : இரா.பி.சேது(ப்பிள்ளை): தேவீச்சுரம்
(ஊரும் பேரும் 50 : இரா.பி.சேது(ப்பிள்ளை): அகத்தீச்சுரம் தொடர்ச்சி) ஊரும் பேரும் தேவீச்சுரம் தேவீச்சுரம் என்னும் திருக்கோயில் தென்னாட்டில் உள்ளதென்பது “திரிபுராந்தகம் தென்னார் தேவீச்சுரம்” என்ற திரு வாக்கால் விளங்கும். தென்னாடாகிய நாஞ்சில் நாட்டில் கன்னியாகுமரிக்கு அணித்தாகத் தேவி ஈசனை வழிபட்டுப் பேறு பெற்ற தலம் ஒன்றுண்டு. தேவீஸ்வரர் என்பது அங்குள்ள ஈசன் திரு நாமமாக இன்றும் வழங்கி வருகின்றது. அழகிய நாயகி என்று பெயர் பெற்றுள்ள வடிவுடையம்மையின் பெருமையால் முன்னாளில் தேவீச்சுரம் என்று அழைக்கப்பெற்ற திருக்கோயில் இந்நாளில் வடிவீச்சுரம் என வழங்குகின்ற…