தமிழே! – கவிஞர் தே.ப.பெருமாள்
நிறைவினில் மலர்ந்தொளிரும் தமிழே – என் நெஞ்சத்தில் அமுதாகும் தமிழே! உறவினில் உயிரான தமிழே – என் உணர்வினில் கவிபேசும் தமிழே! ஒழுக்கத்தின் மணம்வீசும் தமிழே – வீர உருவத்தில் கூத்தாடும் தமிழே! விழுப்பத்தின் நலமுரைக்கும் தமிழே – நீதி மேவியே கோலோச்சும் தமிழே! நிலவின் குளிர்பெற்ற தமிழே – கதிர் நிரப்பும் ஒளிபெற்ற தமிழே! மலரின் மெதுவேற்ற தமிழே – தேன் வழங்கும் சுவை கொண்ட தமிழே! மின்னின் விசைகொண்ட தமிழே – கடல் விரிக்கும் திரைமுழக்கத் தமிழே! கன்னி நிறைபொலியுந் தமிழே…