தைவானில் தமிழ்ப் பள்ளி தொடக்க விழா- முப்பெரும்விழா
புரட்டாசி 07, 2048 / 23-09- 2017, சனிக்கிழமை மாலை 5.30 – 7.00 தைவானில் தமிழ்ப் பள்ளி தொடக்க விழா- முப்பெரும்விழா தேசியத் தைவான் பல்கலைக்கழக விளையாட்டு வளாகம், தைவான் தைவானில், தமிழ்ப் பள்ளி தொடக்க விழா, தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் (இ)யூசி அவர்களுக்கு பாராட்டு விழா, தமிழ்ஆராய்ச்சி மாணவர்களுக்கு வரவேற்பு என முப்பெரும் விழா நடைபெறுகிறது. சீன மண்ணில் பொங்குதமிழோசைதனை பரவச்செய்த தைவான் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் (இ)யூ சி அவர்களின் தமிழ்த் தொண்டு அளப்பரியது. உலகப்பொதுமறை திருக்குறள், பாரதியார்…
திருவள்ளுவரும் கன்ஃபூசியசும் – விருதாளர் தைவான் யூசி உரை
ஒன்பான் விருதுகளை அறிவித்த தமிழக அரசு திருவள்ளுவர் நாளன்று விருதுகள் வழங்கப்பெறும் என்றும் அறிவித்தது. பின்னர் இவ்விருதுகள் குடியரசு நாளன்று வழங்கப்பெறும் என்று அறிவித்தது. எனினும் திருவள்ளுவர் விருது மட்டும் திருவள்ளுவர் நாளன்றே வழங்கப் பெறும் என அறிவித்தது. இதன்படி தை 2 ஆம் நாளான சனவரி 16 அன்று திருவள்ளுவர் விருது, திருக்குறளைச் சீன மொழியில் மொழிபெயர்த்த தைவான் நாட்டுக் கவிஞர் யூசிக்கு வழங்கப்பெற்றது. தமிழக நிதி-பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உரூபாய் நூறாயிரத்திற்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரைச் சான்று ஆகியவற்றை…