பெண்கள் பாதுகாப்புக்காகத் தொடரியில் புதிய ஏற்பாடு!

விரும்பிய இடத்தில் மாறிக் கொள்ளும் வசதி!  தனியாகப் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்புக்காகத் தொடர்வண்டியில் புதிய ஏற்பாடு!   தொடர்வண்டிப் பயணத்தின்பொழுது சுற்றிலும் ஆண் பயணிகள் இருந்தால், பெண் பயணிகள் வேறு இடத்துக்கு மாறிக் கொள்ளும் வசதியைத் தெற்கு இருப்பூர்தித்துறை (Southern Railway Department) அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பாகத் தெற்கு இருப்பூர்தித்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொடர்வண்டிப் பயணங்களின்பொழுது சில நேரங்களில் தனியாகச் செல்லும் பெண்களுக்கு, சுற்றிலும் ஆண் பயணிகளே இருக்கும் வகையில் இடம் ஒதுக்கப்படுகிறது. அந்த நேரத்தில் பெண்கள் வசதிக்குறைவாகவும், பாதுகாப்பு இன்றியும் உணர்கின்றனர்….

சாரணர் பயிற்சி பெற்றவர்களுக்குத் தொடர்வண்டித்துறையில் வேலைவாய்ப்பு

சாரணர் பயிற்சி பெற்றவர்களுக்குத் தொடர்வண்டித்துறையில் வேலைவாய்ப்பு செகந்திராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தென்-நடுவண் தொடர்வண்டித்துறையில் காலியாக உள்ள குழு – இ, குழு – ஈ (Group – C & Group – D) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. [விளம்பர எண்: SCR/R-HQ/128/S&G/2015-16] மொத்தக் காலியிடங்கள்: 14 பணி: குழு – இ (Group-C) பணியிடங்கள் (சாரணர்கள் மற்றும் வழிகாட்டிகள்) (Scouts & Guides). காலியிடங்கள்:  02. அகவை வரம்பு: 18 – 29க்குள் இருக்க வேண்டும். தகுதி: மேனிலைப்பள்ளி இறுதி…