தமிழ்ப் பெரியார் திரு. வி. க. 6. – வ.உ.சிதம்பரனார்
(தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார், 5. உயிர்த்தொண்டு – தொடர்ச்சி) தமிழ்க்கலை 6. வ. உ. சிதம்பரனார் [9-11-47 ஞாயிறன்று சென்னை செயின்ட்மேரி மண்டபத்தில் நடைபெற்ற தமிழரசுக் கழக மகாநாட்டில் தோழர் வ. உ. சிதம்பரம் பிள்ளையவர்களின் படத்தைத் திறந்து வைத்து ஆற்றிய சொற்பொழிவு.) நான் வ. உ. சிதம்பரம்பிள்ளை யவர்கள் படத்தைத் திறப்பேன் என்றார் தலைவர். இத்தனிப்பேற்றினை வழங்கிய கழகத்தாருக்கும் உங்களுக்கும் என் நன்றி உரியதாகுக. நான் இங்கு எக்கட்சியின் சார்பிலும் வரவில்லை, நான் எக்கட்சியையும் சார்ந்தவனல்ல. சிலர் நினைக்கிறார்கள்,…
தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார், 5. உயிர்த்தொண்டு
(தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார், 4. வள்ளலார் திருவுள்ளம் – தொடர்ச்சி) 5. உயிர்த்தொண்டு (சென்னை தொண்டைமண்டலம் துளுவவேளாளர் பாட சாலையில் ஆற்றிய சொற்பொழிவு) மாணவ மணிகளே, நீங்கள் வாழ்கின்ற காலம் இந்தக்காலமா? அந்தக்காலமா? எந்தக்காலம்? நீங்கள் வாழ்கின்ற காலம் நெருக்கடியான காலம். உடை கிடைப்பது, சோறு கிடைப்பது அரிதாயிருக்கிற காலம். சில மாணாக்கர்கள் பரிட்சை இல்லாத காலம் வருமா? என்றுகூட எண்ணலாம் பரிட்சை ஒழிந்தால் ஒரு பெரிய சனியன் ஒழிந்தது என்று எண்ணும் மாணாக்கரும் இருக்கலாம். மாணவ மணிகளின் உடல்…