தகவலாற்றுப்படை

மாசி 29, 2045 / மார்ச்சு 13, 2015 தமிழரின் கடலோடிய  தொன்மையும் திறனும் ஒரிசா பாலு உரை   அன்புடன், தமிழ் இணையக் கல்விக்கழகம், காந்தி மண்டபம் சாலை, அரசு தகவல் தொகுப்பு விவரம் எதிரில் சென்னை – 25. தொ.பே: 2220 1012 / 13 மின் முகவரி: tamilvu@yahoo.com  

பழந்தமிழ் நிலமே உலகின் நடுப்பகுதி

பழந்தமிழ் நிலமே உலகின் நடுப்பகுதி   இத்துணை யாராய்ச்சியானே குமரிக்குத் தென்பால் பெரு நிலப் பரப்புஇருந்த தென்பதும் அது உலகிற்கு நடுமையாமென்பதும் ஆண்டிருந்தோர் தமிழரென்பதும் சிறந்த பல காரணங்களாற் பெறப்பட்டமை காண்க. – மாகறல் கார்த்திகேயனார் : மொழிநூல் (1913) ப.5

தமிழே தொன்மையும் வளமையும் சீர்மையும் செம்மையும் உடையது.

தமிழே தொன்மையும் வளமையும் சீர்மையும் செம்மையும் உடையது.   திராவிட மொழிகளுள் தமிழ்மொழியே மிகமிகத் தொன்மை வாய்ந்ததும், பெருவளம் பொருந்தியதும், மிகவுஞ் சீர்திருந்தியதுமான உயர்தனிச் செம்மொழியாகும்; சொல்வள மிகுந்தது; அளவிட வொண்ணாப் பண்டைக்காலமுதற் பயின்று வருவது. வகையும் தொகையும் தனியுமாகக் கணக்கற்ற இலக்கியங்கள் இம்மொழியில் இலங்குகின்றன. ஆனால், பெரும்பாலும் அவையெல்லாம் மிகவுந் திருந்திய செந்தமிழ் நடையானியன்றவை; வழக்காற்றிற் பேசப்பட்டு வரும் கொடுந்தமிழ் நடையானியன்றவையல்ல. – கிரீயர்சன்; கால்டுவெல் ஒப்பிலக்கணம்: கிரீயர்சன் மொழியாராய்ச்சிக் குறிப்புகளுடன்: பக். 172