விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்

(விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 1 இன் தொடர்ச்சி) விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 2 அடுத்த வாரமே  குமணன் நட்சத்திர விடுதியில் விருதாளருக்கு என ஒரு சிறப்பு அறையை ஒதுக்கி வைத்து விட்டனர். அவர் எப்பொழுது வேண்டுமானாலும் இங்கே வரலாம். எவ்வளவு நாட்களும் தங்கியிருக்கலாம் என்றனர். உணவு முதலிய எதற்கும் அவர் கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை என்றனர். ஐயா, நீங்கள் திரைக்கதை உரையாடலை எழுதியும் தரலாம். உங்களுக்கு ஓர் உதவியாளரை அமர்த்தியுள்ளோம். அவர் கணிணியில் தட்டச்சு செய்து தருவார் என்று ‘வி’ கதைக்குழுத் தலைவர்…

மாணவப் பருவக் காதல் கதைகளையும் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களையும் தடை செய்க!– இலக்குவனார் திருவள்ளுவன்

மாணவப் பருவக் காதல் கதைகளையும் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களையும் தடை செய்க! ஒருதலைக்காதலால் அல்லது ஒருதலை விருப்பத்தால் கொலைகள் பல பெருகி வருகின்றன.  காதலுக்காக எதையும் கொடுக்கலாம். ஆனால் காதலுக்காக மற்றவரின் உயிரை எடுக்கலாமா? எனக்குக் கிடைக்காத பெண் அல்லது சிறுபான்மை ஆண் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று ஆசைப்படும் பொருளாகக் கருதி, மறு தரப்பாரை கழுத்தை அறுத்துக் கொல்வது, எரித்துக் கொல்வது, வேறு வகையில் கொலை செய்வது, முகத்தில் அமிலம் ஊற்றிச் சிதைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது பெருகி வருகிறது. இவ்வாறு பாதிக்கப்படுபவர்கள்…