பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ் மீட்பு உணர்வு 2/3
பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ் மீட்பு உணர்வு 2/3 தமிழ்நாட்டின் நிலப்பகுதிகள் மலையாள நாடு, தெலுங்கு நாடு எனப் பிறவாகப் பறிபோனமைபோல் கன்னடநாடாகப்பறிபோனதையும் அகநானூற்றுப் பாடல் 115 இல் வரும் எருமை குடநாடு என்பது குறித்த பின்வரும் விளக்கத்தின் மூலம் உணர்த்துகிறார். எருமை: ‘எருமை குடநாடு’ என்பதனால், குடநாட்டை ஆண்ட ஒருவன் எருமை என்ற பெயரைக் கொண்டுள்ளதாக அறிகின்றோம். இன்று யாரேனும் ஒருவரை இகழ்ச்சியாகக் கூற விரும்பின் ‘எருமை’ என்று கூறுகின்றோம். ஆதலால் ஒருவர்க்கு ‘எருமை’ என்ற பெயர் இடப்பட்டிருந்தது என்றால் வியப்பாகத்தான் இருக்கும்….
பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ் மீட்பு உணர்வு 1/3
பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ் மீட்பு உணர்வு தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்கள் தமிழ் வளர்ச்சியையே சிந்தித்துத் தமிழ்க்காப்பையே செயல்படுத்தித் தமிழ்க்காக வாழ்ந்த தலைமகனாவார் என அறிஞர்கள் பலர் குறிப்பிட்டுள்ளனர். தமிழ்த்தாய் என்றே அவரைப் பலரும் விளக்கி உள்ள பொழுது, மேனாள் துணைவேந்தர் முனைவர் கதிர் மகாதேவன், “தமிழ்த்தாய் படத்தைக் காட்டச் சொன்னால் பேராசிரியர் இலக்குவனார் படத்தைக் காட்டுவேன்” என்றார். இவ்வாறு அறிஞர்கள் போற்றுவதற்குக் காரணம், இயல்பாகப் பேசும் பொழுதும் பாடம் நடத்தும் பொழுதும், சொற்பொழிவு ஆற்றும்பொழுதும், இலக்கிய விளக்கங்கள், கட்டுரைகள்,…
தொல்காப்பிய விளக்கம் 15 – பேராசிரியர் சி. இலக்குவனார்
(சித்திரை 21, தி.ஆ.2045 / 06, மே 04, 2014 இதழின் தொடர்ச்சி) 3. பிறப்பியல் தமிழ் மொழிக்குரிய எழுத்தொலிகளைப் பற்றியும் அவை பயிலு மாற்றையும் முன் இரு இயல்களில் ஆசிரியர் தொல்காப்பியர் கூறினார். இனி அவை தோன்றும் முறை பற்றிக் கூறத் தொடங்குகின்றார். எழுத்தொலிகள் பிறக்கும் முறைபற்றி மேலை நாட்டு மொழி நூலார்களும் இந்நூற்றாண்டில் கூறத் தொடங்கியுள்ளனர். எழுத்துகளின் பிறப்பிடங்களைக் கொண்டே எழுத்துகளை, மிடற்றினம், பல்லினம், இதழினம், அண்ண இனம் என்றெல்லாம் பெயரிட்டுள்ளனர். ஆசிரியர் தொல்காப்பியர் அவ்வாறு பெயரிடாது போயினும்,…
தொல்காப்பிய விளக்கம் 14 – பேராசிரியர் சி. இலக்குவனார்
(சித்திரை14, தி.ஆ.2045 / 06, ஏப்பிரல் 27, 2014 இதழின் தொடர்ச்சி) 76. உப்பகாரம் ஒன்றென மொழிய இருவயின் நிலையும் பொருட்டாகும்மே. உப்பகாரம் = பு, ஒன்று என மொழிப = ஒரு மொழிக்கு ஈறாகும் என்ற கூறுவர். இருவயின் நிலையும் = தன்வினை பிறவினை என்னும் இரண்டிடத்தும் நிலைபெறும், பொருட்டாகும் = பொருண்மைத்தாகும். காட்டு: தபு : இஃது ஒலியைத் தாழ்த்திச் சொல்ல ‘நீ சா’ எனத் தன்வினையாகும்; ஒலியை உயர்த்திச் சொல்ல நீ ஒன்றனைக் கொல் எனப் பிறவினையாகப் பொருள்…
தொல்காப்பிய விளக்கம் 13 – பேராசிரியர் சி. இலக்குவனார்
(சித்திரை 07, தி.ஆ.2045 / 06, ஏப்பிரல் 20, 2014 இதழின் தொடர்ச்சி) 67. குற்றியலுகரம் முறைப்பெயர் மருங்கின் ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும் குற்றியலுகரம் = குறைந்த ஓசையை, உடையது எனப்படும் ‘உ’, முறைப்பெயர் மருங்கின் = (நுந்தை என்னும்) முறைப்பெயரிடத்து, ஒற்றிய நகரமிசை = ஒற்றாய் நின்ற நகரத்தின் மேல், நகரமொடு முதலும் = நகரமெய்யோடு மொழிக்கு முதலாகி வரும். உகரம் ஓசையில் குறைந்து வருவது, நுந்தை என்னும் சொல்லில் மொழிமுதலில் உண்டு என்று அறியற்பாலது. ‘நுந்தை’ என்பதனையும், ‘நுமக்கு’ என்பதனையும்…
தொல்காப்பிய விளக்கம் – 10 : முனைவர் சி.இலக்குவனார்
தொல்காப்பிய விளக்கம் – 10 (எழுத்ததிகாரம்) தொல்காப்பியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (தை 6 , 2045/19 சனவரி 2014 இதழ்த் தொடர்ச்சி) ட,ர, எனும் இவை மொழிமுதல் எழுத்துக்களாக வருதல் இல்லை. ‘ன்’க்குப் பிறகு ‘ட’வும் ‘ள்’க்குப் பின்னர் ‘ர’வும் வருதல் இல்லை. ஆனால் ‘வல்லெழுத்து இயையின் டகாரம் ஆகும்’ எனும் இடத்திலும் ‘அவற்றுள், ரகார ழகாரம் குற்றொற்று ஆகும்’ எனும் இடத்திலும் விதிக்கு மாறாக வந்துள்ளன. இந்நூற்பாக்களில், ட, ர, என்பனவற்றின் இயல்பு விளக்கப்படுகின்றது. ஆதலின்…