தாமரை மன்னிப்பு கேட்க வேண்டும்!
குடும்பச்சிக்கலைத் தமிழ்த்தேசியச் சிக்கலாகத் திரிக்கலாமா? இல்லறம் என்பது அன்பும் அறனும் இணைந்த நல்லறமாகும். நம்பிக்கை, புரிதல், விட்டுக் கொடுத்தல் ஆகியவை இருந்தால்தான் அமைதியான வாழ்க்கை காணமுடியும். ‘வீட்டுக்கு வீடு வாசற்படி’ என்பது எல்லாக் குடும்பங்களிலும் சண்டையும் பிணக்கும் உள்ளமையை உணர்த்துவதே! எனவே, குடும்பத்தலைவன், தலைவியிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் மன வேறுபாடாக மாறும் முன்னரே இணங்கிப்போய் இணைந்து வாழ்வதுதான் அவர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கும் ஏற்றதாய் அமையும். கருத்து வேறுபாடுகளையும் கருத்து மோதல்களையும் இயல்பாக எடுத்துக் கொள்ளாமல் பகையாக நோக்குவதால்தான்…
இலங்கையைப் புறக்கணிப்போம்!- ஆளுநர் மாளிகை முற்றுகை
இலங்கையைப் புறக்கணிப்போம்! இந்திய அரசே! அரசுறவு, பொருளியல், கலை, பண்பாடு, விளையாட்டு, என அனைத்திலும் இலங்கையைப் புறக்கணி! மாசி 29, 2045 / மார்ச்சு 13, 2015 வெள்ளி காலை 10.00 மணி – ஆளுநர் மாளிகை நரேந்திர மோடியின் இலங்கைப் பயணத்தைக் கண்டித்து… ஆளுநர் மாளிகை முற்றுகை… தலைமை: தோழர் தியாகு, ஆசிரியர், தமிழ்த் தேசம். ஒருங்கிணைப்பு: தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம். அனைவரும் வருக!!
அம்பேத்கார் சிறப்புக் கருத்தரங்கம்
சித்திரை 07, 20146/ ஏப்பிரல் 20, 2015 புதுக்கோட்டை
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுக் குழு முடிவுகள்
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுக் குழு சென்ற மார்கழி 13, 2045 / 28.12.2014 ஞாயிறு அன்று சென்னையில் கூடி எடுத்த ஒருமன முடிவுகள்: 1) தோழர் தியாகு இயக்கத்தின் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார். 2) தோழர் வே.பாரதி இயக்கத்தின் புதிய பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். 3) தோழர் தியாகு, தோழர் வே.பாரதி, தோழர் பாரி ஆகியோரைக் கொண்டதே இயக்கத்தின் புதிய தலைமைக் குழு. 4) தமிழ்த்…
எழுத்தினூடே விரியும் தோழர் தியாகுவின் சித்திரம்
புரட்டாசி 26, 2045 / அக்.12, 2014 சென்னை மார்க்சியம், சிறை இலக்கியம், கல்வி, தியாகுவின் உரைகள், மொழியாக்கம்