தோழர் தியாகு எழுதுகிறார் 18 : கரி படுத்தும் பாடு

(தோழர் தியாகு எழுதுகிறார் 17.2: ஏ. எம். கே. நினைவாக (2) தொடர்ச்சி- தொடர்ச்சி) கரி படுத்தும் பாடு காலநிலை மாற்றம் வறுமைக்கும் அடிமை முறைக்கும் காரணமாகி மாந்த வாழ்வைச் சீர்குலைக்கக் கண்டோம். ஆனால் எந்த உயிரினத்தையும் அது விட்டு வைப்பதில்லை. காலநிலை மாற்றம் இப்படியே தொடருமானால் கடல்சார் உயிர்க் கோளங்கள் இந்த நூற்றாண்டு முடிவதற்குள் உலகளாவியச் சிதைவுக்குள்ளாகும் என்று பிரின்சுடன் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது. மூ ஊரிகள் (Dinosaurs) அழிந்த பிறகு ஏற்படும் பேரழிவாக இஃதமையும். புவி வெப்பமாகும் வேகத்தைக் கட்டுப்படுத்தத் தவறினால் புவிக்…

தோழர் தியாகு எழுதுகிறார் 17.2: ஏ. எம். கே. நினைவாக (2) தொடர்ச்சி

(தோழர் தியாகு எழுதுகிறார் 17 : ஏ. எம். கே. நினைவாக (2) தொடர்ச்சி) ஏ. எம். கே. நினைவாக (2) தொடர்ச்சி ஒரு நாள் ஏஎம்கே ஏதோ உடல்நலிவுக்காகச் சிறை மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரிடம் உடம்பைக் காண்பித்து, மருந்து கேட்டார். மருத்துவர் சொன்னார்: ” இதோ பாருங்கள் ஐயா. இது கறுப்புக் குல்லா சிறை. இங்கே மருந்தெல்லாம் அவ்வளவாகக் கிடைக்காது. ஏதாவது வாணாளர்(லைஃபர்) சிறைக்குப் போய்விட்டீர்கள் என்றால்  நல்ல மருந்தாகக் கிடைக்கும்.” ஆக, நோய்க்கு மருந்து கொடுப்பதில் கூட கறுப்புக் குல்லாய் என்றால் பாகுபாடு! உணவு தொடர்பாகவும் கூட…

தோழர் தியாகு எழுதுகிறார் 17 : ஏ. எம். கே. நினைவாக (2)

(தோழர் தியாகு எழுதுகிறார் 16 : ஏ. எம். கே. நினைவாக (1) தொடர்ச்சி) ஏ. எம். கே. நினைவாக (2) கறுப்பும் வெள்ளையும் கடலூர் மத்தியச் சிறையானது பரப்பிலும் கொள்திறனிலும் சிறியதே என்றாலும், மிகப் பழமையான சிறைகளில் ஒன்று. அது கடலூர் நகரத்திலிருந்து சுமார் ஐந்து அயிரைப்பேரடி ( கிலோ மீட்டர்) தொலைவில், வண்டிப்பாளையம் கிராமத்தில், கேப்பர் குவாரி என்னும் மலைக் குன்றின் மீது அமைந்துள்ளது. ஆகவேதான் வண்டிப் பாளையம் சிறை, கேப்பர் குவாரி சிறை என்ற செல்லப் பெயர்களும் அதற்கு உண்டு….

தோழர் தியாகு எழுதுகிறார் 16 : ஏ. எம். கே. நினைவாக (1)

(தோழர் தியாகு எழுதுகிறார் 15 : வறுமையும் அடிமைமுறையும்-தொடர்ச்சி) ஏ. எம். கே. நினைவாக (1) 20.11.2022: ஏஎம்கே என்று நாமறிந்த தோழர் ஏ.எம். கோதண்ட ராமன் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுநாள். தோழர் ஏஎம்கே மறைந்த சில நாளில் அவர் குறித்து முகநூலில் எழுதிய இடுகைத் தொடரைத் தாழி அன்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். முதலில் நான் ஏற்கெனவே அவரது சிறை வாழ்க்கை குறித்து கம்பிக்குள் வெளிச்சங்களில் எழுதியதை (தேவையான சில திருத்தங்களோடு) ஒரு தொடராகப் பதிவிடுகிறேன்.] கைதி செத்தால்… கறுப்புத் திரைகள் திருவோணம்…

தோழர் தியாகு எழுதுகிறார் 14 : அனல் கீழ் பனித் திரள்

(தோழர் தியாகு எழுதுகிறார் 13 : ததும்பும் கடல், தத்தளிக்கும் நாடுகள் – தொடர்ச்சி) அனல் கீழ் பனித் திரள்   காலநிலை மாற்றம் தொடர்பான தரப்புகளின் மாநாடு –27 (கொப்27) எகித்தில் நடந்து முடிந்துள்ளது. கொப்27 (COP27)  மாநாட்டில் ஐநா பொதுச் செயலர் அந்தோணியோ குத்தரசு ஆற்றிய உரையை — நரகத்துக்குச் சென்று கொண்டிருக்கிறோம் என்ற எச்சரிக்கையை — சென்ற மடலில் மேற்கோளாகக் கொடுத்திருந்தேன். மாநாட்டின் உருப்படியான விளைவு என்பது காலநிலை மாற்றம் பற்றிய விழிப்புணர்வின் வளர்ச்சிதான். காலநிலை மாற்றம் என்பது கற்பிதமன்று, அறிவியல் புனைகதையன்று. அஃது அறிவியல் அடிப்படையிலானது. அறிவியலின் துணைகொண்டுதான் அதை வெல்லவும் கூடும். இந்த அறிவியல் எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது என்பது இம்மாநாட்டில் வெள்ளிடை மலையாக ஒளிர்ந்தது. இஃது அதிர்ச்சியளிக்கக் கூடிய உண்மை: ஏடேறிய வரலாற்றில் கடந்த ஏழாண்டுக் காலம் போல் ஒரு வெப்பக் காலம் கண்டதே இல்லை….

தோழர் தியாகு எழுதுகிறார் 13 : ததும்பும் கடல், தத்தளிக்கும் நாடுகள்

(தோழர் தியாகு எழுதுகிறார் 12 : பசிபிக்கு தவிப்பு – தொடர்ச்சி) ததும்பும் கடல், தத்தளிக்கும் நாடுகள் துவாலுவைப் போலவே காலநிலை மாற்றத்தின் விளைவாக அழிவின் விளிம்பில் நிற்கும் மற்ற நாடுகள் எவை? தாழி அன்பர்களின் இந்தக் கவலைதோய்ந்த வினவலுக்கு, பொதுவாக பசிபிக்கு தீவுகள், ஆனால் அவை மட்டுமல்ல என்று விடையிறுக்கலாம். மேலும் துல்லியமாக மாலத்தீவுகள் உள்ளிட்ட சில நாடுகளை ஐநா அமைப்பின் காலநிலை வல்லுநர்கள் பட்டியலிட்டுள்ளனர். 1900க்குப் பின் நாளது வரை கடல்மட்டம் 15 – 25 கீழ் நூறன் கோல்(centimeter) (6 முதல் 10…

தோழர் தியாகு எழுதுகிறார் 12 : பசிபிக்கு தவிப்பு

(தோழர் தியாகு எழுதுகிறார் 11: காலநிலை மாற்றம் கற்பிதமன்று – தொடர்ச்சி) பசிபிக்கு தவிப்பு துவாலுவைப் போலவே காலநிலை மாற்றத்தால் இடர்நிலையில் இருக்கும் மற்ற தீவுகள்பற்றித் தோழர் கதிரவன் கேட்டிருந்தார். பலருக்கும் அதே கேள்வி உண்டு. ஒரு வகையில் பார்த்தால் இந்தப் புவிக் கோளமே காலநிலை மாற்றத்தால் இடர்நிலையில்தான் உள்ளது. முன்னால் யார், பின்னால் யார் என்பதில்தான் வேறுபாடு. மேலும் கடலுக்குள் மூழ்கிப் போவது மட்டும்தான் கேடு என்பதில்லை. வேறு பல கேடுகளும் நம்மைச் சூழ்ந்துள்ளன. கடலுக்குள் மூழ்கிப் போவது என்ற கடைக்கோடி இடர்நிலையில்…

தோழர் தியாகு எழுதுகிறார் 11: காலநிலை மாற்றம் கற்பிதமன்று

(தோழர் தியாகு எழுதுகிறார் 10: மா இலெனின் விளக்கமும் பேராசிரியர் நெடுஞ்செழியன் நினைவேந்தல் குறிப்பும் தொடர்ச்சி) காலநிலை மாற்றம் கற்பிதமன்று “மெய்ம்மைகளிலிருந்து உண்மைக்கு” என்பார் மா இலெனின். தரவுகளிலிருந்து முடிவுக்கு என்றும் இதைப் புரிந்து கொள்ளலாம். தரவுகள் இல்லாமல் சில முன்-முடிவுகளை மட்டும் வைத்துக் கொண்டு பேசுவதால் பயனில்லை. காலநிலை மாற்றம் தொடர்பான தரவுகள்  இல்லாமல் இந்தச் சிக்கலான போராட்டத்தை முன்னெடுக்க இயலாது. எகித்து நாட்டில் இப்போது காலநிலை மாற்றம் தொடர்பான உயர்நிலை மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டை ஒட்டி முதன்மையான சில காலநிலைத் தரவுகள் வெளிவந்துள்ளன. நேற்றைய இந்து (ஆங்கிலம்) நாளேட்டில் தரவு அணி…

தோழர் தியாகு எழுதுகிறார் 9: புவித்தாய்க்குக் காய்ச்சல்!

(தோழர் தியாகு எழுதுகிறார் 8: கனவுத் திட்டங்கள் கதைத்தல் எளிது! தொடர்ச்சி) புவித்தாய்க்குக் காய்ச்சல்! சூழலரண் அறிக்கையில் தோழர் சமந்தா இப்படி எழுதுகிறார்: “காலப்போக்கில் மனித இனம் இயற்கையை மதிக்கவும் பாதுகாக்கவும் தவறியதாலும், நஞ்சையே விதைத்ததாலும் நம் புவித்தாய் காய்ச்சல் கொண்டிருக்கிறாள், இரண்டு நாளில் சரியாகும் சாதாரணக் காய்ச்சல் அல்ல இது. உயிரைப் போக்கும் நச்சுக் காய்ச்சலால் உயிர்க்கோளம் சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது.”  புவித் தாய்க்கு அவள் பெற்ற மக்களின் செயலாலேயே காய்ச்சல் கண்டுள்ளது! அதே மக்கள்தாம் அந்தக் காய்ச்சலைத் தணிக்கவும் கடமைப்பட்டவர்கள்.    அரசியல் நெருக்கடியையும் பொருளியல்…

தமிழர் திருநாள் & திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்தரங்கம்

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து.   (திருவள்ளுவர்,திருக்குறள் – 1032) தமிழர் திருநாள்-பொங்கற் புதுநாள் திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்தரங்கம் தமிழே விழி !                                                                                                தமிழா விழி  ! இணைய உரையரங்கம்: மார்கழி 24, 2053 ஞாயிறு 08.01.2023 காலை 10.00 மணி கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09(map) வரவேற்புரை: தமிழாசிரியர் (உ)ரூபி தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன் உரையாளர்கள்: முனைவர் தாமரை முனைவர் இராச.கலைவாணி உரைச்சுடர் செல்வி ந.காருண்யா…

தமிழ்க்காப்புக்கழகம்: ஆளுமையர் உரை 31, 32 & 33:இணைய அரங்கம்

தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 31,32 & 33 : இணைய அரங்கம் நிகழ்ச்சி நாள்: மார்கழி 03, 2053 ஞாயிறு 18.12.2022  காலை 10.00 “தமிழும் நானும்” – உரையாளர்கள்: மூத்த இதழாளர் கோவி.இலெனின், பொறுப்பாசிரியர், நக்கீரன் மூத்த இதழாளர் பொன்.தனசேகரன் கல்வி மலர் வெ.சதீசுகுமார், துணைஆசிரியர், தினமலர் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)                           வரவேற்புரை: மாணவர் கு.பாலாசி, அண்ணா பல்கலைக்கழகம் தலைமையுரை…

தமிழ்க்காப்புக்கழகம்: ஆளுமையர் உரை 28, 29 & 30: இணைய அரங்கம்

தமிழே விழி !                                                                    தமிழா விழி! செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை.(திருவள்ளுவர், திருக்குறள் 411) தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 28, 29 & 30: இணைய அரங்கம் நிகழ்ச்சி நாள்: கார்த்திகை 18, 2053 ஞாயிறு 04.12.2022  காலை 10.00 “தமிழும் நானும்” – உரையாளர்கள்: முனைவர் வீ.சந்திரன், மேனாள்  சட்டத்தமிழ் இயக்குநர் திருவாட்டி ஒ.பா.சாந்தி நடராசன், சட்ட மொழிபெயர்ப்பாளர்    முனைவர் மு.முத்துவேலு, உறுப்பினர், மாநிலச் சட்ட ஆட்சி மொழி ஆணையம் கூட்ட எண் / Meeting ID:…