நெய்தல் நிலத்தார் உணவு – மா.இராசமாணிக்கம்

நெய்தல் நிலத்தார் உணவு  ஒய்மானாட்டு நெய்தல் நிலத்தார் நுளைச்சி அரித்த கள்ளையும் உலர்ந்த குழல் மீனின் சூட்டிறைச்சியையும் உட்கொண்டனர். (சி.ஆ.படை அடி:156-163). தொண்டை நாட்டுப் பட்டினத்தில் (இக்கால மாமல்லபுரத்தில்) நெல்லை இடித்த மாவாகிய உணவை ஆண் பன்றிக்கு இட்டுக் கொழுக்க வைத்தனர். அங்ஙனம் கொழுத்த ஆண் பன்றியைக் கொன்று அதன் இறைச்சியைச் சமைத்து உண்டனர். களிப்பு மிகுந்த கள்ளைப் பருகினர். (பெ.ஆ.படை அடி:339-345). காவிரிப்பூம்பட்டினத்து மீனவர் கடல் இறா, வயல் ஆமை ஆகிய இரண்டையும் பக்குவம் செய்து உண்டனர். (ப.பாலை அடி:63-64). பனங்கள்ளை உட்கொண்டனர்….

மருத நிலத்தார் உணவு – மா.இராசமாணிக்கம்

மருத நிலத்தார் உணவு சோழ நாடு சோற்றுவளம் மிகுந்தது. நல்ல காய்கறிகள் மிக்கது. ஆதலின், சோணாட்டார் நல்ல அரிசிச் சோற்றையும் காய்கறிகளையும் நிரம்ப உண்டிருத்தல் வேண்டும். ஆயினும், சிலவே இந்நூலுள் குறிக்கப்பட்டுள்ளன. மருத நில மக்கள் கரும்பும் அவலும் குறிஞ்சி நிலத்தார்க்குக் கொடுத்து மான் தசையையும் கள்ளையும் பெற்றுக் கொண்டனர் என்பது பொருநராற்றுப்படையில் கூறப்பட்டுள்ளது. அடி:216-217. ஓய்மானாட்டு மருத நிலத்தார் வெண்சோற்றையும் நண்டும் பீர்க்கங்காயும் கலந்த கலவையை(கூட்டை)யும் உண்டனர். (சி.ஆ.படை அடி:193-195). தொண்டை நாட்டு மருத நிலத்துச் சிறுபிள்ளைகள் (காலையில்?) பழைய சோற்றை உண்டனர்;…

முல்லை நிலத்தார் உணவு – மா.இராசமாணிக்கம்

முல்லை நிலத்தார் உணவு   தொண்டைநாட்டு முல்லை நிலத்தார் பாலையும் திணையரிசிச் சோற்றையும் உண்டனர். (பெ.ஆ.படை அடி:167-168). முல்லை நிலத்துச் சிற்றூர்களில் இருந்தவர் வரகரிசிச் சோறும் அவரைப்பருப்பும் கலந்து செய்த “கும்மாயம்” எனப்பெயர் பெற்ற உணவை உண்டனர். (பெ.ஆ.படை அடி:192-195). நன்னனது மலைநாட்டு முல்லை நிலத்தார் சிவந்த அவரை விதைகளையும் மூங்கிலரிசியையும் மேட்டு நிலத்தில் விளைந்த நெல்லின் அரிசியையும் புளி கரைக்கப்பட்ட உலையிற்பெய்து குழைந்த புளியங்கோலாக்கி உட்கொண்டனர். அடி:434-436. பொன்னை நறுக்கினாற்போன்ற நுண்ணிய ஒரே அளவுடைய அரிசியை வெள்ளாட்டு இறைச்சியுடன் கூட்டி ஆக்கிய சோற்றையும்…

குறிஞ்சி நிலத்தவர் உணவு – மா.இராசமாணிக்கம்

குறிஞ்சி நிலத்தவர் உணவு சோழநாட்டுக் குறிஞ்சி நிலமக்கள் தேனையும் கிழங்கையும் உண்டார்கள். பிற நிலத்தார்க்கும் விற்று மீன், நெய்யையும் நறவையும்(தேன்) வாங்கிச் சென்றார்கள் (பொ.ஆ.படை அடி:214-15). சிறப்பு நாள்களில் நெய் மிக்க உணவு உட்கொள்ளப்பட்டது. (குறிஞ்சிப்பாட்டு அடி: 304). நன்னனுக்குரிய சவ்வாது மலையில் அடிவாரத்தில் இருந்த சிற்றூர்களில் வாழ்ந்த மக்கள் திணைச்சோறும் நெய்யில் வெந்த இறைச்சியையும் உண்டார்கள். (மலைபடுகடாம் அடி:168-169). நன்னனுடைய மலைகளைச் சேர்ந்த குறிஞ்சி நிலத்தார் பெண் நாய் கடித்த உடும்பின் இறைச்சியையும் கடமான் இறைச்சியையும் பன்றி இறைச்சியையும் உண்டனர். நெல்லால் சமைத்த…

இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 18 : இலக்குவனார் திருவள்ளுவன்

(அகரமுதல 103 ஐப்பசி 15, 2046 / நவ. 01.2015 தொடர்ச்சி) 18 அட்டவணை 06 இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்கள் (கவிதைகள்) இருபதாம் நூற்றாண்டு கவிதை இலக்கியங்களில் முகப்புப் பகுதியில் –‘பெண்மதிமாலை’ நீங்கலாகத் – தேடுதல் பொறி இருப்பது பற்றிய குறிப்பே இல்லை. வழக்கம்போல் அட்டவணைப் பகுதிக்குச் செல்பவர்கள் மட்டுமே அறிய இயலும். அட்டவணை 07   இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்கள் (உரைநடைகள்) பகுதியில் ஏறத்தாழ 85 நூல்கள் இடம் பெற்றுள்ளன. அனைத்திலும் உள் அட்டவணைப் பகுதியில் தேடுதல் தலைப்பில் பக்கம் தேடலும், சொல்…

தகவலாற்றுப்படை : தொடர் சொற்பொழிவு-13: “சித்தர் இலக்கியம்”

தமிழ் இணையக் கல்விக்கழகம் வழங்கும் தகவலாற்றுப்படை (திட்டத்தின்) தொடர் சொற்பொழிவு-13: “சித்தர் இலக்கியம்”   என்னும் தலைப்பில்   எழுத்தாளர் கரு.ஆறுமுகத்தமிழன் உரையாற்றுகிறார்.   நாள்   : ஐப்பசி 27, 2046 / 13.11.2015, வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 4.30 மணி இடம் : கலையரங்கம், தமிழ் இணையக் கல்விக்கழகம்     திரு. கரு.ஆறுமுகத்தமிழன்  ‘திருமூலரின் மெய்யியலும் சமயமும்-ஓர் ஆய்வு’ என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றவர்; சென்னைப் பல்கலைக்கழகம் முதலான கல்வி நிறுவனங்களில் வருகைப் பேராசிரியராகப் பணியாற்றியவர்; எழுத்தாளர்;…

இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் –17 : இலக்குவனார் திருவள்ளுவன்

(அகரமுதல 102 ஐப்பசி 08, 2046 / அக். 25.10.2015 தொடர்ச்சி) சிற்றிலக்கியங்கள் குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு : அட்டவணைப் பகுதியில் உள்ள   தேடுதல் தலைப்பு மூலம் பக்கம், பாடல், சொல் தேடலாம். மூலமும் உரையும் இணைந்த பகுதியில் பக்கஎண் தேடுதல் இல்லை. சிவப்பிரகாச சுவாமிகள் பனுவல் திரட்டு : அட்டவணைப் பகுதியில் உள்ள   தேடுதல் தலைப்பு மூலமும், ‘மூலமும் உரையும் இணைந்த பகுதியிலும்’ பக்கம் மட்டும் தேடலாம். திருவருட்பா : அட்டவணைப் பகுதியில் உள்ள   தேடுதல் தலைப்பு மூலமும் பாடல் தேடலும் மூலமும்…

இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் –16 : இலக்குவனார் திருவள்ளுவன்

16 சமய இலக்கியங்கள் அட்டவணை – 04 (தேடுதல் தொடரும்) -இலக்குவனார் திருவள்ளுவன்

இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 15 : இலக்குவனார் திருவள்ளுவன்

(அகரமுதல 100, புரட்டாசி 24, 2046 / அக்.11, 2015 தொடர்ச்சி)   15 காப்பிய இலக்கியங்கள் அட்டவணை – 03   பெருங்கதை உரை மூலப்பக்கத்திலேயே உருவாகிறது. பிற வற்றிற்குத் தனிப் பக்கமாகப் பெட்டிச் செய்திபோல் வருகின்றது.   அடுத்துள்ள சமய இலக்கியப் பகுதிகளில் தேடுபொறி வாய்ப்பு குறித்துத் தனித்தனியாகக் காணாமல் அடுத்துவரும் அட்டவணை மூலம் காணலாம். (தேடுதல் தொடரும்) -இலக்குவனார் திருவள்ளுவன்

இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 14 : இலக்குவனார் திருவள்ளுவன்

(இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 13 தொடர்ச்சி) 14 பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் அட்டவணை – 02   திருக்குறளுக்குப் பரிமேலழகர் உரை மு.வரதராசனார் உரை மணக்குடவர் உரை ஞா. தேவநேயப் பாவாணர் அறிஞர் போப்பு மொழிபெயர்ப்பு கவியோகி சுத்தானந்த பாரதியார் மொழிபெயர்ப்பு கலைஞர் உரை உள்ளன. இவற்றுள் அறிஞர் போப்பு உரையில் மட்டும் எவ்வகைத் தேடுதல் பொறியும் இல்லை. பிறவற்றுள் தேடுதல் தலைப்பின் கீழ்ப் பக்கம் தேடலும் சொல் தேடலும் உள்ளன. உரைப்பக்கங்களில் பக்க எண் தேடல் உள்ளன. இசை வடிவில் குறள் பகுதி…

இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 13 : இலக்குவனார் திருவள்ளுவன்

(இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 12 தொடர்ச்சி) 13 அட்டவணை – 01 [+ குறியீடு மட்டும் இருப்பின் சொல் தேடல் இருப்பதைக் குறிக்கும். பக்க எண் +என்றால் பக்க எண் தேடல் இருப்பதையும் பாடல் + அல்லது பா+ என்றால் பாடல் எண் தேடல் இருப்பதையும் அதிகாரம் + என்றால் அதிகார எண் தேடலையும் குறிக்கும். பா எண் என்பது பாடல் அல்லது நூற்பா எண்ணைக் குறிக்கும். அட்டவணைப் பத்தி எண் 2 இல் குறிப்பிடப்படும் சொல் என்பது முகப்புப்பக்க அட்டவணையில் அமையும்…

தமிழ் இணையக்கல்விக்கழகம் : நோக்கும் போக்கும் 8 – இலக்குவனார் திருவள்ளுவன்

8  ஙூ.) தமிழ்நாடு இணையத்தமிழ் மன்றம்:   இணையம் வழியாகத் தமிழ் வளர்ப்பதற்குக் கணிணியில் தமிழ்ப்பயன்பாடுகள் பெருக வேண்டும். இதற்கெனத் தமிழக அரசே, ‘தமிழ்நாடு இணையத்தமிழ் மன்றம்’ ஒன்றை அமைக்க வேண்டும்.   ‘தமிழ்நாடு இணையத் தமிழ் மன்றம்’ / ‘தமிழகக் கணித் தமிழ் மன்றம்’ என்ற ஏதேனும் ஒரு பெயரில் இணைய வழியிலான அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கென ஓர் அமைப்பு இன்றியமையாது வேண்டப்படுகின்றது.   ‘தமிழ் இணையக் கல்விக்கழகம்’ என்னும் அமைப்பு இருக்கும்பொழுது வேறு தேவையா என்ற எண்ணம் எழலாம். அந்த அமைப்பு…