தமிழ் இணையக்கல்விக்கழகம் : நோக்கும் போக்கும் 7 – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ் இணையக்கல்விக்கழகம் : நோக்கும் போக்கும் 6 தொடர்ச்சி) 7 ஙி.) மொழிக்கொலைக்குத் துணை நிற்கக்கூடாது : தமிழ் இணையக்கல்விக்கழகம் அரசு சார் நிறுவனம். எனவே, அரசின் கொள்கைக்குமாறான செயல்களில் ஈடுபடவோ அரசின் கொள்கைக்கு மாறான கருத்துகளைப் பரப்பவோ இடம் தரக்கூடாது. தமிழக அரசு, சீர்திருத்தம் என்ற பெயரிலான எழுத்துச்சிதைவிற்கு எதிரானது. ஆனால், இதன் தளத்தில் முந்தைய தலைவர் வரிவடிவச்சிதைவில் ஈடுபாடுள்ளவர் என்பதால் அதற்குரிய விளக்கத்தைக் காணொளி வாயிலாகப் பரப்பிவந்தனர். அதனை அகற்றுமாறு வேண்டியும் அகற்றவில்லை. அதற்கு மாறான உண்மைக் கருத்தை…
உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்! – மொத்தப் பரிசுத் தொகை உரூ.50,000!
“வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை” “தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்” இணைந்து நடத்தும் உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்! மொத்தப் பரிசுத் தொகை உரூ.50,000! ஐந்துவகைப் போட்டிகள்! – வகைக்கு மூன்று பரிசுகள்! முதல் பரிசு உரூ.5,000 இரண்டாம் பரிசு உரூ.3,000 மூன்றாம் பரிசு உரூ.2,000 ஒவ்வொரு பரிசுடனும் “தமிழ்க்களஞ்சியம்“ இணையம் வழங்கும் மதிப்புமிகு வெற்றிக் கேடயம்! இவ்வாறாக ஐந்து போட்டிகளுக்குமான மொத்தப் பரிசுத் தொகை உரூ.50,000! வகை-(1): கணிணியில் தமிழ்வளர்ச்சி- கட்டுரைப் போட்டி: கணினியில் தமிழ்வளர்ச்சி குறித்த ஆதாரத் தகவல்கள், ஆக்கபூர்வக்…
தமிழ் இணையக்கல்விக்கழகம் : நோக்கும் போக்கும் 5 – இலக்குவனார் திருவள்ளுவன்
(அகரமுதல 95, ஆவணி 20, 2046 / செப்.06, 2015 தொடர்ச்சி) மீள்பார்வைக் குழு : த.இ.க.கழகத்தின் தளத்தில் நூற்பதிவு முடிந்த பின்னர் அல்லது இது போன்று ஏதும் பதிவாக்கம் முடிந்த பின்னர் அவை சரியான முறையில் உள்ளனவா எனப் பார்ப்பதில்லை. ஒருவரிடம் அல்லது அமைப்பிடம் பொறுப்பை ஒப்படைத்த பின்னர், அவர்கள் பணி முடிவிற்குப் பணம் கொடுத்ததும் அப்பணி நிறைவுற்றது என்ற போக்கே இக்கழகத்தில் உள்ளது. எனவே, தவறுகள் கண்டறியப்படாமல் உள்ளன. எனவே, மீள்பார்வைக் குழுவை அமைத்து, ஒவ்வொரு பணி முடிந்த பின்னர் உரிய…
தமிழ் இணையக்கல்விக்கழகம் : நோக்கும் போக்கும் 6 – இலக்குவனார் திருவள்ளுவன்
6 3.பணித்தரவுக் குழு: த.இ.க.கழகத்தின் பணிகள் சரியான முறையில் மக்களுக்குத் தரப்படுவதில்லை. வெளிப்படுத்தும்பாங்கில் உள்ள தவறு சில இடங்களில் காரணமாக அமைகின்றது. தொடக்கப் பணிகளைத் தளத்தில் கொடுத்துவிட்டு அப்பணிகள் வளர்கையில் அல்லது பெருகுகையில் அவற்றைச் சேர்க்காமை பல இடங்களில் காரணமாக அமைகின்றது. சான்றாக இதன் தளத்தில் முனைவர்பட்ட ஆய்விற்குரிய தரவு நூல்கள் உள்ளன என்பதுபோல் குறிப்பும் தொடர்பில்லாமல் வழிகாட்டியும் தமிழ்ப்பல்கலைக்கழக முனைவர் பட்டமும் தரப்படும் என்பன போன்ற குறிப்புகளும்தான் உள்ளன. மாறாக முனைவர் பட்டம் ஆய்விற்குப் பதிவும் வழிகாட்டியும் தரவு நூல்களும் வழங்கப்பெற்று,…
தமிழ் இணையக்கல்விக்கழகம் : நோக்கும் போக்கும் 4 – இலக்குவனார் திருவள்ளுவன்
(அகரமுதல 94, ஆவணி 13, 2046 / ஆக.30, 2015 தொடர்ச்சி) 4 த.இ.க.க.வளர்ச்சிக்காக அமைக்கப்பட வேண்டிய குழுக்கள்: என்னென்ன குழுக்கள் தேவை எனப் பார்ப்போம். செம்மையாக்கக் குழு: த.இ.க.கழகத்தின் பாடங்களில் தவறுகள் இடம் பெற்றுள்ளன. தொல்காப்பியர் காலம் பின்னுக்குத் தள்ளப்பட்டு உரைக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு அடிப்படையில் எழுத்து வளர்ச்சி எனக் கூறுவது தவறான விளக்கம். கல்வெட்டில் உள்ளதுபோன்ற எவ்வரிவடிவ மாற்றமும் ஓலைச்சுவடிகளில் இடம் பெற்றதில்லை. “தொல்லை வடிவின எல்லா எழுத்தும்” என இலக்கண நூல்களே வரிவடிவ மாற்றமின்மையைக் குறிக்கின்றன. எனவே, இது போன்ற…
தமிழ் இணையக்கல்விக்கழகம் : நோக்கும் போக்கும் 3 – இலக்குவனார் திருவள்ளுவன்
(ஆவணி 06, 2046 / ஆக.23, 2015 தொடர்ச்சி) 3 ஙா.) குழுக்கள்: குழுக்களில் தமிழறிஞர்களுக்கு இடமில்லை அல்லது மிகச் சிறுபான்மையராக உள்ளனர். பன்னிருவர் உறுப்பினராக உள்ள பொதுக்குழுவிலும் ஒன்பதின்மர் உறுப்பினராக உள்ள இயக்குநர் குழுமக்குழுவிலும் பதவி வழி உறுப்பினர்கள்தாம் உள்ளனர். தமிழறிஞர்கள் இல்லை. பதினொருவர் உறுப்பினராக உள்ள கல்விப் பேரவைக் குழுவில் இருவர் மட்டுமே தமிழறிஞர்கள். ஒன்பதின்மர் உறுப்பினராக உள்ள கைப்பேசி வல்லுநர் குழுவில் ஒருவர்கூடத் தமிழறிஞர் இல்லை. பத்தொன்பதின்மர் உறுப்பினராக உள்ள அறிவுரை(ஆலோசனை) நிலைக் குழுவிலும் தொடக்கத்தில் தமிழறிஞர் இல்லை….
தமிழ் இணையக்கல்விக்கழகம் : நோக்கும் போக்கும் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்
(அகரமுதல 92 ஆடி 31, 2046 / ஆக.16, 2015 தொடர்ச்சி) 2 தமிழ்ப்புலமையுள்ளவர்களே இயக்குநர்களாக அமர்த்தப்பட வேண்டும் என்பது குறித்துத் தமிழ்க்காப்புக்கழகம் சார்பில் அரசிற்கு முறையீடு அளிக்கப்பட்டது. இதில், பின்வருமாறு தெரிவிக்கப்பட்டது : “இத்தகைய நோக்கங்களையும் குறிக்கோளையும் நிறைவேற்ற தமிழ்ப்புலமை உள்ளவர் அதனை வழி நடத்தலே ஏற்றது என அனைவரும் அறிவர். ஆனால் இயக்குநராக நியமிக்கப்பட விரும்பியவரின் தகுதி அடிப்படையில் இந்நிறுவனம் தொடங்கப்பட்ட பொழுது அப்போதைய அரசால் இயற்பியல் / பொறியியல் / தகவலியலில் முனைவர் பட்டம் பெற்றிருத்தலே அடிப்படைத் தகுதியாக…
இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 4 இலக்குவனார் திருவள்ளுவன்
(ஆடி 31, 2046 /ஆக.16, 2015 தொடர்ச்சி) 3.] சங்க இலக்கியச் சொல்லடைவு இதில் தேடுபொறி இல்லை. அகரவரிசைப்படி நாம் சொல்லைத் தேடுவதற்கு மாற்றாகச் சொல் தேடுதல் அமைந்தால் எளிதில் பொருள்காண இயலும். நேரம் வீணாவது தடுக்கப்படும். நூற்பக்கங்களில் பக்க எண் தேடல் உள்ளது. 4.] திருக்குறட் சொல்லடைவு ‘திருக்குறட் சொல்லடைவு சொல் தேடல்’ என்னும் தலைப்பு உள்ளது. இதன் மூலம் அகரவரிசையிலான முழுப் பக்கங்களைத்தான் காண இயலும்(பட உரு 20). வேண்டும் சொல்லுக்கான பொருளை எளிதில் காண இயலாது. ஆனால், இதில் பக்க…
தமிழ் இணையக்கல்விக்கழகம் : நோக்கும் போக்கும் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ் இணையக்கல்விக்கழகத்தின் இப்போதைய ‘நோக்கும் போக்கும்’ எவ்வாறுள்ளது என்பது குறித்தும் எவ்வாறு அவை அமைய வேண்டும் என்பது குறித்தும் ஒரு சிற்றாய்வு. ங.) சிதைக்கப்படும் நோக்கம்: “உலகில் நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வாழும் தமிழர்கள் தங்களுடைய மரபுகளையும், விழுமியங்களையும், பண்பாட்டையும் பாதுகாக்க வேண்டும். இத்தேவையை நிறைவேற்ற அவர்கள் தங்கள் மொழி, கலை, இலக்கியம் இவற்றோடு நீங்காத தொடர்புடன் வாழ வேண்டும். உலகு தழுவி வாழும் தமிழ் மக்களின் பண்பாட்டுத் தேவைகளை மனத்திற்கொண்டு தமிழக முதல்வர் அவர்கள் 1999இல் தமிழ். இணையப் பல்கலைக்கழகத்தைத் தொடங்கினார்”…
இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 3: இலக்குவனார் திருவள்ளுவன்
3 தமிழ்கியூப் அகராதி(http://dictionary.tamilcube.com/ ) முதலான பிற அகராதிகளில் மேற்குறித்த எவ்வகையில் சொல் அமைந்தாலும் உரிய பொருள்களைக் காட்டும். எடுத்துக்காட்டு விளக்கம் வருமாறு(பட உரு 15, 16 & 17):- படவுருக்கள் 15, 16 & 17 ஐரோப்பிய அகராதியில் (http://eudict.com) இடைக்கோடு இருக்க வேண்டிய இடங்களில் இடைக்கோடு இல்லாவிட்டால் மட்டும் காட்டாது(படவுருக்கள்18 & 19). படவுருக்கள்18 & 19 தனியார் சிறப்பான முறைகளில் தேடுபொறிகளை அமைத்துப் பயன்படுத்துநர் உரிய பயனை அடைவதில் கருத்து செலுத்தும் பொழுது தஇகக அதில் கருத்து…
இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 2 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஆடி 17, 2046 / ஆக.02, 2015 தொடர்ச்சி) 2 2.] கலைச்சொல் பேரகராதி 2.1. தொடக்கத்தில் (~university என்பதுபோல்) இடைவெளி இருப்பின் முழுத் தேடுதலில் ஒன்றும் காட்டாது. எனவே, சொற்பொருள் இல்லை என்ற எண்ணம் ஏற்படும்(பட உரு 09). பட உரு 09 2.2. அவ்வாறு இடைவெளி இருப்பின் பகுதித் தேடுதலில் பொருள் காட்டும். (பட உரு 10). (கூட்டுச்சொல்லில் இடைவெளி அடுத்துத்தானே தொடர் சொல்லாய் அமையும்.) பட உரு 10 2.3. முதல் எழுத்து (University என்பதுபோல்) பெரிய எழுத்தாக…
இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ்க்கணிணி-இணையப்பயன்பாடுகள் : பன்னாட்டுக் கருத்தரங்கம் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை அறிவியல் கல்லூரி. திருச்சிராப்பள்ளி பங்குனி 13 &14, 2045 / மார்ச்சு 27& 28, 2014 தமிழ் இணையப் பல்கலைக்கழகமாக இயங்கிய, இப்போது தமிழ் இணையக்கல்விக்கழகமாகச் செயல்படும் நிறுவனம் குறிப்பிடத் தகுந்த இலக்கண இலக்கியங்களை அறியவும் அறிமுக நிலையில் தமிழ் கற்கவும் பட்டயக்கல்வி, பட்டய மேற் கல்வி, இளங்கலைக் கல்வி, கணிணிக்கல்வி ஆகியன கற்கவும் சொற்பொருள், கலைச்சொற்கள் அறியவும் சிறப்பாக உதவி வருகிறது. தகவல் மையம், சுற்றுலா வழிகாட்டி, கணிப்பொறி தொடர்பானவை…