கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 41 : 8. கடல்நகரில் தங்கிய காதை
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 40 : சொற்போர் புரிக-தொடர்ச்சி) அத்தியாயம் 8. கடல்நகரில் தங்கிய காதைநகரத்தார் வேண்டுதல் தாமரைக் கண்ணி தன்னொடு வந்ததோமறு பூங்கொடி தூயநல் லுரையால்திருந்திய மனத்தினர் திரள்கொடு வந்தே,`இருந்திடல் வேண்டும் இன்னும் சின்னாள்நின்னுரை கேட்டோர் நேரிய ராகிப் 5புன்முறை நீங்கிப் புந்தி தெளிந்துமல்கிருள் அகல மதியொளி பெற்றுநல்லுணர் வெய்தி நலம்பெறல் திண்ணம்ஆதலின் நங்காய்! அருளுதி, நின்னகர்ப்போதல் ஒழிமதி!’ எனுமுரை புகன்றனா 10 அக்கொடி தன்னுளம் அறிந்தவ ளாதலின்தோமறு பணிசெயத் தூயவ ளாகியதாமரைக் கண்ணி தந்தனள் இசைவே;ஆண்டிருந் தேகி அணிமலர்க் கண்ணி…