சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை  அணி 14 நங்கையும் நாணலும் கொண்டையதோ வெண்பூக்கள் கொண்டிருக்கும், நாடலுறும் கெண்டைகளும் உள்ளிருக்கக் கேள்வியெழும் –  பண்டையரின் பாவிருக்கும், பங்கமிலாப் பண்பிருக்கும், பெண்ணினத்தைக் காவிருக்கும் நாணலெனக் காட்டு . பொருள் – நங்கை பெண்கள் தலைவாரிக் கொண்டையிட்டுப் பெரும்பாலும் வெண்பூக்களைச் சூடிக் கொள்வார்கள். விரும்பத் தகுந்த புருவத்திற்குக் கீழே இமைகளின் காவற்கு உள்ளே கெண்டை மீனையொத்த கண்கள் பல கேள்விகளை அசைவில் கேட்கும். பண்டை இலக்கியங்களில் பெண்ணின் பெருமை போற்றாத புலவர்களே இல்லை. பெண் மென்மையானவள்;  நல்ல பண்பு நலன்களைக்…