ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 11 : நடுப் பருவம்
(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 10 : தாய் மரணம் – தொடர்ச்சி) என் சுயசரிதை : அத்தியாயம் 5. நடுப் பருவம் பி.ஏ. தேறினவுடன், நான் வழக்குரைஞராக வேண்டுமென்று தீர்மானித்து சட்ட வகுப்பில் சேர்ந்தேன். சட்டக்கல்லூரியில் படித்தபோது பெரும்பாலும் எங்கள் தகப்பனார் புதிதாய் கட்டிய எங்கள் எழும்பூர் பங்களாவிலிருந்து கல்லூரிக்கு மிதிவண்டியில் போய்க்கொண்டிருந்தேன். இந்தச் சட்டக்கல்லூரியில் நான் சேர்ந்தவுடன் நான்கைந்து வருடங்களாக என்னை விட்டுப்பிரிந்த என் உயிர் நண்பராகிய வி. வி. சீனிவாச ஐயங்கார் தானும் பி.ஏ. பரிட்சையில் தேறினவராய் என்னுடன் சேர்ந்தார்….